

இந்தியாவின் நகரங்கள் எங்கும் பெண்கள் பணிபுரிந்தாலும் அவர்களின் பாதுகாப்புக்கு அரசுகளால் உத்தரவாதம் அளிக்க முடியாத நிலைதான் நீடிக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் பெண்களைக் காக்கும் பாதுகாப்புக் கருவிகள், திறன்பேசிகளைப் போலவே அத்தியாவசியத் தேவையாகிவிட்டன.
கண்ணுக்குத் தெரியாத கையடக்கக் கருவிகளும் எளிதில் கையாளக்கூடியவையும் பெண்களின் தேர்வாக இருக்கின்றன. இவை ஆபத்துக் காலத்தில் பெண்கள் உடனடி உதவியைப் பெற உதவுகின்றன. இவை பெண்களின் தனிப்பட்ட பாதுகாப்பை அதிகரிப்பதுடன் தன்னம்பிக்கையையும் தருகின்றன.