கேள்வி நேரம்: ஜனநாயகத்தின் நீதிமன்றம்

கேள்வி நேரம்: ஜனநாயகத்தின் நீதிமன்றம்
Updated on
2 min read

சட்டமன்றத்தின் முதல் நாள். தொகுதி மக்களின் எதிர்பார்ப்பு களையும் நம்பிக்கைகளையும் சுமந்துகொண்டு புதிய உறுப்பினர் தமிழரசி சபையில் நுழைந்தார். புதிய உறுப்பினர்களைச் சுற்றி அமரவைத்துப் பேசத் தொடங்கினார் மூத்த உறுப்பினர் கலைவாணி.

“இந்தச் சட்டமன்றம் தேவைப்பட்டதன் காரணம் மகத்தானது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்மக்களின் சார்பாகச் சட்டங்கள் இயற்ற, அரசின் செயல்பாடுகளைக் கண்காணிக்க, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த ஓர் இடம் வேண்டும். அந்த நோக்கத்துக்காகவே சட்டமன்றம் இன்றும் துடிப்போடு இயங்குகிறது. அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் நீங்கள் எல்லாரும் பணியாற்ற வேண்டும். அதற்காக நீங்கள் என்ன பேசலாம், எப்போது பேசலாம், எப்படிக் கேள்வி கேட்கலாம் என்பதெல்லாம் சில திட்டவட்டமான விதிகளால் நெறிமுறைபடுத்தப்பட்டுள்ளன.”

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in