சீராகச் சாப்பிட்டால் வலி குறையும் | கேளாய் பெண்ணே

சீராகச் சாப்பிட்டால் வலி குறையும் | கேளாய் பெண்ணே
Updated on
1 min read

மாதவிடாயின் போது ஏற்படும் வலியைக் குறைப் பதற்கு என்ன செய்யலாம்? PCOD/PCOS பாதிப்பு உள்ளவர்கள் எந்த மாதிரி உணவைச் சாப்பிடலாம்?

- தேவி, சென்னை.

பதில் அளிக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் சந்தியா மணியன்.

மாதவிடாய் காலத்தில் உணவின் மீது அதிக ஈர்ப்பு (Cravings) ஏற்படுவதால் இனிப்பு, காரம், எண்ணெய்யில் பொரித்த தின்பண்டங்களைச் சாப்பிடத் தோன்றும்; அதை முறையாகக் கையாண்டு தவிர்க்க வேண்டும். மக்னீசியம் சத்து நிறைந்த கீரை வகைகள், வெற்றிலை, விட்டமின் பி-6 சத்து நிறைந்த தீட்டப்படாத அரிசி, பருப்பு வகைகளைச் சாப்பிடலாம். புரதச்சத்து, மக்னீசியம், விட்டமின் பி-6 நிறைந்த உணவு வகைகளைத் தொடர்ச்சியாகச் சாப்பிடுவதோடு, மிதமான உடற்பயிற்சிகளையும் செய்து வந்தால் மாதவிடாய் கால வலி குறையும்.

பி.சி.ஓ.டி பிரச்சினை இருக்கிறவர்கள் அன்றாட உணவில் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் 50 சதவீதமும் புரதச்சத்து நிறைந்த பருப்பு, சோயா அல்லது இறைச்சி வகைகள் 25 சதவீதமும் மாவுச்சத்து நிறைந்த சாதம் அல்லது சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்றவை 25 சதவீதமும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இந்தச் சீரான உணவுமுறை பி.சி.ஓ.டி. பிரச்சினை இருப்பவர்களுக்கு மட்டுமல்லாமல் உடல் பருமன், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் தீர்வளிக்கும்.

சீராகச் சாப்பிட்டால் வலி குறையும் | கேளாய் பெண்ணே
பட்டதாரியாக்கிய ஆர்வம் | வாசிப்பை நேசிப்போம்
Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in