பெண்களைக் காக்கும் பேரரண் | பெண் கோணம்

பெண்களைக் காக்கும் பேரரண் | பெண் கோணம்
Updated on
2 min read

பெண்மை என்பது மென்மையல்ல, அது ஒரு பேராற்றல். சர்வதேச மகளிர் தினத்தின் 2026ஆம் ஆண்டின் மையக்கருவாக ‘உரிமைகள், நீதி, செயல்பாடு’ (Rights, Justice, Action) என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு வாழ்வாதார உரிமை என்பது வெறும் முழக்கமல்ல என்பதை இந்திய உச்ச நீதிமன்றம் தனது அண்மைக்காலத் தீர்ப்புகள் மூலம் உலகுக்கு உரக்கச் சொல்லிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு தீர்ப்பும் ஒரு கவிதை; ஒவ்வொரு வழிகாட்டுதலும் ஒரு புரட்சி. சமூகக் கட்டமைப்பையும் சட்டச் சிக்கல்களையும் தகர்த்தெறிந்த மைல்கல் தீர்ப்புகளை அறிந்துகொள்வது மகளிர் நாள் கொண்டாட்டத்துக்குப் பொருள் சேர்க்கும்.

மௌனத்தைக் கலைத்த மாதவிடாய் உரிமை: பல கோடி சிறுமிகள் மாதவிடாய் என்கிற இயற்கை நிகழ்வை ஒரு சாபமாக எண்ணி, தகுந்த வசதிகள் இல்லாததால் பள்ளிகளை விட்டு வெளியேறுகிறார்கள். இது வெறும் சுகாதாரம் சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல; ஒரு பிஞ்சு மனதின் கனவுகள் சிதைக்கப்படும் பெருங்கொடுமை.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in