கூட்டுறவு இயக்கத்தின் முதல் பெண்குரல்! | வட்டத்துக்கு வெளியே

கூட்டுறவு இயக்கத்தின் முதல் பெண்குரல்! | வட்டத்துக்கு வெளியே
Updated on
1 min read

ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதத்தின் முதல் சனிக்கிழமை பன்னாட்டுக் கூட்டுறவு நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கூட்டுறவுத் துறைக்கான தனி அமைச்சகத்தை ஒன்றிய அரசு தொடங்கி ஐந்து ஆண்டுகள் நிறைவுபெற்றதை முன்னிட்டு, கூட்டுறவு அமைச்சகத்தால் ஒருவார கால விழா முன்னெடுக்கப்பட்டு, ஜூலை 6 அன்று டெல்லியில் நிறைவு விழா கொண்டாடப்பட உள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்தான் இந்தியாவின் கூட்டுறவு வங்கிகளின் முதல் பெண் இயக்குநராக இருந்தார் என்பது இந்தக் கொண்டாட்டத்துக்கு ஒளியூட்டுகிறது. அந்தப் பெருமைக்குக் காரணமானவர் பெரியாரின் தங்கை சா.ரா.கண்ணம்மாள்.

1891ஆம் ஆண்டு ஈரோட்டில் சின்னத்தாயம்மாள் – வெங்கட்டர் இணையருக்கு மகளாகப் பிறந்தவர் கண்ணம்மாள். எஸ். ராமசாமி என்பவரை மணமுடித்த பின்னர், எஸ்.ஆர். கண்ணம்மாள் என்று அறியப்பட்டார். பெரியாரின் சீர்திருத்தப் பணியில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டார்.

இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது காந்தியடிகள் அறிவித்த கள்ளுக்கடைப் போராட்டத்தில் பங்கேற்றார். போராட்டத்தைக் கைவிடுமாறு ஆங்கிலேயர்கள் காந்தியிடம் கோரிக்கை விடுத்த போது, “இப்போராட்டத்தைக் கைவிடுவது என் கையில் இல்லை. ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்மணிகளின் கையில்தான் உள்ளது” என்று கூறினார். கண்ணம்மாளும் பெரியாரின் மனைவி நாகம்மையாரும்தான் அந்த இரண்டு பெண்கள்!

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in