

தடைதாண்டி வெல்லும் போராட்டக் குணமிக்கவர்கள் பெண்கள். தங்களைச் சுற்றி எழுப்பப்படும் அடிமைக் கோட்டைகள் அனைத்தையும் தகர்த்தெறிந்து பாதைபோட்ட பெண்கள் பலர். 2025ஆம் ஆண்டிலும் பெண்கள் தடம் பதிக்கத் தவறவில்லை. வாகை சூடியவர்களில் சிலர் இவர்கள்:
சர்வதேச அங்கீகாரம்: கன்னட எழுத்தாளர் பானு முஷ்டாக், 2025ஆம் ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ‘ஹார்ட் லேம்ப்’ (இதய விளக்கு) சிறுகதைத் தொகுப்புக்காக இந்தப் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. இந்தப் பரிசை வெல்லும் முதல் கன்னட எழுத்தாளர் அவர். ‘ஹார்ட் லேம்ப்’ புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் தீபா பாஸ்தி. பானு முஷ்டாக், 1948ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தின் ஹாசன் மாவட்டத்தில் இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர். செயற்பாட்டாளரான இவர் வழக் கறிஞராகவும் பணியாற்றி யிருக்கிறார். 1999இல் கர்நாடக சாகித்ய அகாடமி விருது, தான சிந்தாமணி அத்திமாப்பே விருது ஆகியவற்றைப் பெற்றிருக்கிறார்.
தீபா பாஸ்தி, பானு முஷ்டாக்