

சில நாள்களுக்கு முன் மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கு இரவு நேரப் பேருந்தில் பயணம் செய்தேன். ஒரு தாத்தா, பதினாறு பதினேழு வயது மதிக்கத்தக்க தன் பேத்தியுடன் பேருந்தில் ஏறினார்.
பேருந்தில் பலர் உறங்கியபடி இருக்க, தாத்தாவும் பேத்தியும் மட்டும் அவ்வளவு சந்தோஷமாகப் பேசிச் சிரித்தபடி வந்தனர். இரண்டு மணி நேரப் பயணத்துக்குப் பின் பேருந்து கோவில்பட்டியைக் கடந்து சென்றுகொண்டிருந்தது. அதுவரை பேசிச் சிரித்தபடி வந்த பேத்தி திடீரென அமைதியாகிவிட, தாத்தாவுக்கு ஒன்றும் புரியவில்லை.