

ஆசிரியர், தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர், ‘பாட்காஸ்டர்’ எனப் பல துறைகளில் திறமைமிக்கவர் தீபிகா அருண். ‘பாட்காஸ்ட்’டில் ‘கதை ஓசை’ எனும் பெயரில் தமிழ் நூல்களை ஒலிப்புத்தகமாக வெளியிட்டு வருகிறார் தீபிகா. யூடியூப், ஸ்பாட்டிஃபை போன்ற வலைத்தளங்களில் 70 லட்சம் பார்வையாளர்களுக்குக் குரல்வழியே அறிமுகமான இவர் சென்னை, நங்கநல்லூரைச் சேர்ந்தவர்.
தன் தம்பியின் அறிவுறுத்தலின்படி ஒலிப் புத்தகங்களைக் கேட்கத் தொடங்கினார். ஆங்கிலத்தில் வெளியான ‘ஹாரிபாட்டர்’ நாவலின் மிகப்பெரிய ரசிகையான இவர், பாட்காஸ்ட்டில் முதன் முதலில் கேட்ட ஒலிப்புத்தகமும் அதுதான். “இந்தப் புத்தகத்தைப் பத்து முறை யாவது படித்திருப்பேன். ஆனால், ஒலிப் புத்தகம் எனக்குள் தனி தாக்கத்தை ஏற்படுத்தியது.