மாமன்றத்தை அதிரவைக்கும் மூன்று ஆயுதங்கள்! | அரசியல் அறிவோம் 9

மாமன்றத்தை அதிரவைக்கும் மூன்று ஆயுதங்கள்! | அரசியல் அறிவோம் 9
Updated on
2 min read

அதிகாரத்தின் சிம்மாசனங்களை அதிரவைக்கும் விவாதங்களின் தொடக்கப் புள்ளியை அறியும் ஆவலோடு கேட்டார் தமிழரசி: “கலைவாணி, சட்டப்பேரவையின் பரபரப்பான இயக்கம் எப்படித் தொடங்குகிறது?” “ஒரு நதி ஓடுவதைப் போன்ற நேர்த்தியான வரிசைப் படிதான்!” என்று புன்னகைத்தார் கலைவாணி.

“முதலில் கேள்வி நேரம் என்னும் ஜனநாயகக் கணை தொடுக்கப்படும். பிறகு, வழக்கமான பணிகள் சுழலத் தொடங்கும். ஆனால், திடீரென ஒரு அவசரமான மக்கள் பிரச்சினை வெடித்தால்? அங்கேதான் அரசின் கவனத்தை ஈர்க்கும் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மூன்று ஆற்றல் மிக்கக் கருவிகள் பாய்கின்றன.

முதலாவது, கவன ஈர்ப்புத் தீர்மானம் (Calling Attention). அவசர, பொது முக்கியத்துவம் வாய்ந்த ஓர் எரியும் பிரச்சினையை நோக்கி, ஓர் உறுப்பினர் அமைச்சரின் கவனத்தை ஈர்க்கிறார். அமைச்சர் உடனடியாகவோ பின்னரோ பதில் அளிக்கிறார். வழக்கமான பணிகள் முடங்குவதில்லை; ஆனால், மக்களின் பிரச்சினை ஆவணத்தில் பதிவாகிவிடுகிறது.

இரண்டாவது, குறுகிய கால விவாதம் (Discussion for short duration). காலத்தின் அருமை கருதி நடத்தப்படும் மின்னல் வேக விவாதம். அவசர நிர்வாக விவகாரத்தை நோக்கி, ஒரு மணி நேரத்துக்கு மிகாமல் அவை விவாதிக்கும். வாக்கெடுப்போ குற்றச்சாட்டோ இருக்காது; கூர்மையான கவனமும் தெளிவான விளக்கமும் மட்டுமே இருக்கும். இந்த இரண்டு கருவிகளும் அரசை வீழ்த்தாது; அரசின் ஓட்டத்தை நிறுத்தாது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in