கட்சித் தாவுவது சரியா ? | அரசியல் அறிவோம் -13

கட்சித் தாவுவது சரியா ? | அரசியல் அறிவோம் -13
Updated on
2 min read

செய்திகளையும் அன்றாட அரசியல் நிகழ்வுகளையும் அவதானித்துக் கொண்டிருந்த தமிழரசிக்குக் கட்சித் தாவல் சட்டம் குறித்த சந்தேகம் எழுந்தது. அதைக் குறித்து கலைவாணியிடம் கேட்டார்.

தமிழரசி: இன்று இந்திய ஜனநாயகத்தை அச்சுறுத்தும் முக்கியப் பிரச்சினைகளில் ஒன்றான கட்சித் தாவல் (Defection) உருவான பின்னணி என்ன அக்கா?

கலைவாணி: 1960–70களில் பல எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கொள்கையைவிடப் பதவி, அதிகாரம் போன்ற சுயலாபங்களுக்காக அடிக்கடி கட்சி மாறினர். குறிப்பாக, 1967இல் ஹரியாணா எம்.எல்.ஏ. கயா லால் வெறும் 15 நாள்களில் மூன்று முறை கட்சி மாறியதால், ‘ஆயா ராம், கயா ராம்’ (வந்த ராம், போன ராம்) என்கிற அரசியல் சொற்றொடர் உருவானது. இந்த அரசியல் சீரழிவைத் தடுக்கவும் மக்களாட்சியின் நிலைத்தன்மையைக் காக்கவும் அரசமைப்பில் பத்தாவது அட்டவணை (Tenth Schedule) இணைக்கப்பட்டது.

தமிழரசி: மிகவும் சுவாரசியமான பின்னணி. அப்படியென்றால், இந்த 10ஆவது அட்டவணையின் கீழ் ஒரு மக்கள் பிரதிநிதி தகுதிநீக்கம் செய்யப்படக்கூடிய சூழ்நிலைகள் என்னென்ன?

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in