ஒரு நாட்டின் மனசாட்சி எது? | அரசியல் அறிவோம் 11

ஒரு நாட்டின் மனசாட்சி எது? | அரசியல் அறிவோம் 11
Updated on
2 min read

சட்டமன்றக் குழுக்கள் குறித்து தமிழரசிக்கு ஏராளமான கேள்விகள். அவற்றை ஒவ்வொன்றாகக் கேட்க, கலைவாணியும் திருத்தமாகப் பதில் அளித்தார்.

தமிழரசி: கலைவாணி அக்கா, சட்டமன்றத்தில் 234 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இத்தனை பேர் ஒவ்வொரு விஷயத்தையும், ஒவ்வொரு மசோதாவையும், ஒவ்வொரு துறையின் செலவையும் விரிவாக ஆராய முடியுமா? நேரம் போதுமா?

கலைவாணி: மிக நல்ல கேள்வி. அதற்குத்தான் ‘குழுக்கள்’. ஒரு பெரிய அவையால் ஆற்ற இயலாத நுணுக்கமான, ஆழமான ஆய்வைச் சில உறுப்பினர்கள் கொண்ட சிறு குழுக்கள் அமைதியாகச் செய்கின்றன. அறிஞர்கள் இதை ‘மினி சட்டமன்றம்’ என்றே அழைக்கின்றனர்.

ஏனெனில் முழு அவையின் அதிகாரத்தையும் நம்பிக்கையையும் சுமந்து, அதற்குப் பதிலாக இவை செயல்படுகின்றன. தமிழ்நாடு சட்டமன்ற விதிகளின் அத்தியாயம் XX (விதிகள் 194 முதல் 272 வரை) இந்தக் குழுக்களை நுணுக்கமாக வரையறுக்கிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in