பொறுமையின் கருவிகள் | அரசியல் அறிவோம் 10

பொறுமையின் கருவிகள் | அரசியல் அறிவோம் 10
Updated on
2 min read

கேள்வியோடு தொடங்கினார் தமிழரசி. “அவசரமான விஷயத்துக்குக் கவன ஈர்ப்பும் ஒத்திவைப்பும் என்று சொன்னீர்கள். ஆனால், ஒரு பிரச்சினை பொது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தும், அவசரம் இல்லாவிட்டால் என்ன செய்வது? அப்படிப்பட்ட பிரச்சினைகள் மௌனமாகிவிடுமா?”

“நல்ல கேள்வி” என்று புன்னகைத்தார் கலைவாணி. “அப்போது பொறுமையின் கருவிகள் உள்ளன. அவசரம் இல்லை என்பதால் விஷயம் முக்கியமில்லாமல் போகாது; அதற்கேற்ற வேறு வழிகள் உண்டு. அவசரக் கருவிகள் விரைவைக் கோருகின்றன; இந்தக் கருவிகள் ஆழத்தையும் விவாதத்தையும் கோருகின்றன.

முதலாவது, நாள் குறிக்கப்படாத தீர்மானம். உறுப்பினர் அறிவிப்பு அளிக்கிறார்; சபாநாயகர் ஏற்கிறார். ஆனால், அவசரம் இல்லாததால் விவாத நாள் உடனே குறிக்கப்படுவதில்லை. பேரவை ஆலோசனைக் குழு பின்னர் நேரம் ஒதுக்கும். அதுவரை அந்தத் தீர்மானம் நிகழ்ச்சி நிரலில் பொறுமையாகக் காத்திருக்கும். முழு விவாதமும் வாக்கெடுப்பும் இதில் சாத்தியம்; எனவே இது வலிமையான கருவி.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in