

வாழ்க்கையில் போராடி, களைத்து, செய்வதறியாது கலங்கி மனக்குழப்பத்தோடு விழப்போகவிருந்த என்னைத் தூக்கிப்பிடித்தது அவரது அன்பான, ஆறுதலான, ஆதரவான சொற்கள். ஊக்கத்தோடு போராட நம்பிக்கையைக் கொடுத்துச் செயல்படவைத்த அந்தப் பேரிளம்பெண்ணை உயிருள்ளவரை நன்றியோடு நினைவில்கொள்வேன்.
அவர் எங்கள் வீட்டினருகே சில காலம் குடியிருந்தார். நான் படும் துன்பத்தைக் கண்டு, “துவண்டுவிடாதே, துணிச்சலோடு போராடு. தைரியம் கொள். தன்னம்பிக்கையை விட்டு விடாதே. முயற்சியைத் தொடர்ந்து கொண்டேயிரு. நிச்சயம் பலன் கிடைக்கும். தன்மானத்தையும் சுயகெளரவத்தையும் எந்நிலையிலும் தொலைத்து விடாதே. மூலையில் முடங்கிவிடாதே. காலம் மாறும், நீயும் தெளிவு பெறுவாய். பொறுத்திரு” என்று வழிகாட்டினார். அவரின் பேச்சு என்னைச் சிந்திக்க வைத்து, நம்பிக்கையோடு செயல்பட முனைப்பாக அமைந்தது.