

மூன்று பெண்களில் நான் இரண்டாமவள். நாங்கள் மூன்று பேரும் ஒரே வயிற்றில்தான் பிறந்தோம். ஆனால், குணங்களில் வேறு வேறு. நானும் என் தங்கையும் இன்று கல்வி கற்றிருக்கிறோம் என்றால், அதற்குக் காரணம் எங்கள் அக்கா முத்துலெட்சுமி. எங்கள் தலைமுறையில் முதல் தலைமுறை பட்டதாரியாகப் படிக்க வெளியே சென்றவர் அவர்தான்.
பட்டயப் படிப்புதான் அவரால் படிக்க முடிந்தது. ஆனாலும் விடவில்லை. ஏதேதோ வழியைக் கண்டறிந்து அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும் பெற்றார். அவர் பட்டம் பெற்றபோது அவர் ஒன்பது மாதக் கர்ப்பிணி.