

வாசிப்பு என்பது நாம் வாசித்துக் கடந்த சொற்களின் எண்ணிக்கையல்ல. அந்தச் சொற்கள் நம் மனதோடு நிகழ்த்தும் உரையாடலே வாசிப்பு. தேர்ந்தெடுத்த வாசிப்பில்தான் இது சாத்தியம். நம் ஆளுமையில் மாற்றத்தை விளைவிக்கும் ஆற்றலுடன் ஏராளமான நூல்கள் நம்மிடையே குவிந்துகிடக்கின்றன. அவற்றைத் தேடிக் கண்டடைவது நம் வாழ்க்கையைப் பொருள்பொதிந்ததாக மாற்றும். சமீபத்தில் வெளியான நூல்களில் சில இவை:
பெண்ணுக்கு மட்டுமே பிற்போக்கு வாழ்விலக்கணங் களை வகுத்து வைத்திருக்கும் இந்த ஆணாதிக்கச் சமூகத்தில் ஆண் என்பதே ஆணுக்குப் பெருமிதமாகிவிடுகிறது. பாலினரீதியான பாகுபாட்டையும் ஒடுக்குமுறைகளையும் களைவதற்கான வழிமுறைகளை எளிய சொற்களில் முன்வைக்கிறது இந்நூல்.
குத்தமா சொல்லல, குணமாவே சொல்றோம்!
(ஆண்களுக்கான இல்லறக் குறிப்புகள்)
l ஜெ.தீபலட்சுமி
ஹெர் ஸ்டோரிஸ்
விலை: ரூ. 125
தொடர்புக்கு: 7550098666
பெண்களுக்குப் பொருளா தாரத் தற்சார்பு தருகிற ஆசுவாசம் அளப்பரியது. நிதித் திட்டமிடல் என்றாலே ஆண்களுக்கானது என்கிற கற்பிதத்தைக் களைந்து பெண்களுக்கான நிதித் திட்டமிடலை நேர்த்தியாக எடுத்து ரைக்கிறது இந்நூல். வீட்டு பட்ஜெட், பங்குச் சந்தை, காப்பீடு என ஏராளமான நிதி ஆலோசனைகளை இந்நூல் முன்வைக்கிறது.
நிதி நிம்மதி
(பெண்களுக்கான நிதித் திட்டமிடல் கையேடு)
lஏ.ஜி.அபூபக்கர் சித்திக்
விலை: ரூ.185
தொடர்புக்கு: 9003055599.
தமிழ்நாட்டில் ஜனநாயக மாதர் சங்கத்தைத் தோற்றுவித்து வலுப்படுத்திய பாப்பா உமாநாத், மைதிலி சிவராமன் ஆகிய இரு பெரும் ஆளுமைகளுடன் பத்திரிகையாளர் ஞாநி 2000இல் கண்ட நேர்காணலின் தொகுப்பு இந்நூல். அரசியலில் பெண்கள் இன்னும் சமத்துவத்தை எய்தாத நிலையில் இந்த முன்னத்தி ஏர்களின் அனுபவம் நம்பிக்கை தருவதாக இருக்கிறது.
இருவர்
lதோழர் பாப்பா உமாநாத்/தோழர் மைதிலி சிவராமன்
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு மாநிலக்குழு.
விலை: ரூ.35
தொடர்புக்கு: 044-28511231
நாகர் பழங்குடியினத்தைச் சேர்ந்த டெம்சுலா ஆவ், தங்கள் மக்களின் பண்பாடு, தொன்மம், நம்பிக்கைகள் குறியீடுகள் போன்ற வற்றைப் பிரதிபலிக்கும் வகையில் எழுதிய எட்டுக் கதைகளின் தொகுப்பு இந்நூல்.
என் தலைக்கு மேல் சரக்கொன்றை
lடெம்சுலா ஆவ்
தமிழில்: எம்.ஏ. சுசீலா
நற்றினை பதிப்பகம்
விலை: ரூ.190
தொடர்புக்கு: 9486177208
பால் புதுமையரை மையப் படுத்தி ஆஸ்திரேலிய நாவலாசிரியர் சூசன் ஹாதோர்ன் எழுதிய இந்நூல், தன்பாலி னர்கள் தங்களின் பாலியல் அடையாளத்தைத் தக்க வைத்துக் கொள்ளுவதற்கான போராட்டத்தை விவரிக்கிறது.
சொல்லக்கூடாத உறவுகள்
lசூசன் ஹாதோர்ன்
தமிழில்: சசிகலா பாபு
காலச்சுவடு
விலை: ரூ.325
தொடர்புக்கு: 04652-278525