

பெண்களுக்குப் போராடாமல் விடிந்ததில்லை. தங்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளுக்காகவும் பொது நலனுக்காவும் காலந்தோறும் பெண்கள் போராடியபடி இருக்கிறார்கள்; தடை கடந்து தடம் பதிக்கிறார்கள். கடந்த பத்து ஆண்டுகளில் தங்களது செயல்பாடுகள் மூலம் கவனம் ஈர்த்த ஆளுமைகளில் இவர்களும் அடங்குவர்.
l விஜி, ‘பெண்கூட்டு’ அமைப்பு
கேரள மாநிலத்தைச் சேர்ந்த தையல் தொழி லாளியான இவர் தன்னைப் போலவே முறைசாரா தொழிலில் ஈடுபடும் பெண்களின் அடிப்படை உரிமை களுக்காகப் போராடுபவர்.
l இரோம் ஷர்மிளா
மணிப்பூரின் இரும்புப் பெண் என்று அழைக்கப்படும் இவர், அசாம் மாநில ஆயுதப்படைக்கு வழங்கப் பட்டிருக்கும் சிறப்பு அதிகாரச் சட்டத்துக்கு எதிராக 16 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியவர். மனித உரிமைப் போராளி.
l மேனகா குருசாமி - அருந்ததி கட்ஜு
பால் புதுமையினரின் உரிமைகளுக்காகக் குரல்கொடுக்கும் வழக்கறிஞர்கள். தன்பாலினத் திருமணங்கள் கிரிமினல் குற்றமல்ல என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங் கியதில் இவர்களின் பங்கு முக்கியமானது.
l ராணா அயூப்
புலனாய்வுப் பத்திரிகையாளரான இவர், 2002 குஜராத் கலவரம் குறித்துப் புலனாய்வு செய்து ‘குஜராத் ஃபைல்ஸ்’ என்னும் நூலை எழுதினார். சமகால அரசியல் குறித்துத் தன் நிலைப்பாட்டைத் தொடர்ந்து பதிவுசெய்துவருகிறார்.
l திஷா ரவி
பெங்களூருவைச் சேர்ந்த கால நிலை செயற்பாட்டாளரான இவர் கிரெட்டா துன்பெர்க்கின் ‘ஃபிரைடேஸ் ஃபார் ஃபியூச்சர்’ அமைப்பு இந்தியா வில் செயல்பட காரண மாக இருந்தவர். 2020இல் டெல்லியில் நடை பெற்ற விவசாயிகள் போராட்டத் தின்போது அவர்களுக்கு ஆதரவாகச் சமூக வலைத் தளத்தில் கோப்பு ஒன்றைப் பகிர்ந்ததற்காகக் (டூல் கிட் வழக்கு) கைது செய்யப்பட்டார்.
l கே கே ஷைலஜா
கோவிட் பெருந் தொற்றுக் காலத்தில் கேரள சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த இவர் அந்த நெருக்கடி காலத்தை அநாயசமாகக் கையாண்டர். நிபா வைரஸ் தொற்றின்போது அறிவியல்ரீதியான அணுகுமுறையைக் கையாண்டு சர்வதேச அளவில் கவனம்பெற்றார்.
l ஷெஹ்லா ரஷீத்
டெல்லி ஜவாஹர்லால் பல்கலைக்கழக முனைவர் பட்ட மாணவியான இவர், அந்தப் பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவர் தேர்தலில் வென்ற முதல் காஷ்மீரத்துப் பெண். மாணவர் உரிமைகளை வலியுறுத்தி நடத்தப்பட்ட பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியுள்ளார். மாணவர் சங்கத் தலைவராக கண்ணையா குமார் இருந்தபோது அவரைக் கைது செய்ததைக் கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
lவனிதா முத்தையா - ரிது கரிதால்
பெண்களுக்குத் தொழில்நுட்ப அறிவு குறைவு என்கிற கற்பிதத்தை மாற்றிக்காட்டினார்கள் சந்திரயான் திட்டத்தில் பணியாற்றிய பெண்கள். சந்திரயான் II திட்ட இயக்குநராக வெற்றித்தடம் பதித்தார் வனிதா முத்தையா. மங்கள்யான், சந்திரயான் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்ததற்காக ‘ராக்கெட் பெண்’ என்று அழைக்கப் படுகிறார் ரிது கரிதால்.
l பில்கிஸ் பானு
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற டெல்லி ஷாகீன் பாக் போராட்டத்தில் பங்கேற்றார். 84 வயதாகும் இவர் கொட்டும் மழையிலும் கொளுத்தும் வெயிலிலும் அயராமல் போராட்டத்தில் பங்கெடுத்து இளையோருக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.
l கீதாஞ்சலிஸ்ரீ
இந்தி நாவலாசிரியரான இவர் முனைவர் பட்டப் படிப்பின்போது தனது முதல் சிறுகதையை எழுதினார். இவரது படைப்புகள் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘மை’ என்கிற இவரது நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. இவரது ஐந்தாம் (இந்தி) நாவலான ‘ரெட் சமாதி’யின் ஆங்கில மொழிபெயர்ப்பு (Tomb of Sand) சர்வதேச புக்கர் பரிசை வென்றது. இந்திய மொழி களில் புக்கர் பரிசை வென்ற முதல் படைப்பு இது.