பாரம்பரியம் பேசும் மென்மெத்தைகள்

பாரம்பரியம் பேசும் மென்மெத்தைகள்
Updated on
1 min read

மெத்தைகள் தயாரிப்பதில் இந்தியாவுக்குத் தனி பாரம்பரியம் இருக்கிறது. இந்தியாவின் மலைப் பிரதேசங்களில் வாழும் மக்கள், தேவையை ஒட்டி தயாரிக்க தொடங்கிய இந்த மெத்தைகள், நாளடைவில் அவர்களின் தனி பாரம் பரியமாக மாறத் தொடங்கியது.

இந்த பாரம்பரியப் பெருமை பெற்ற மென்மெத்தைகளைக் காட்சிப்படுத்தும்விதமாக சென்னை லலித் கலா அகாடமியில் இந்திய மென்மெத்தை கண்காட்சிக்கு (Quilts India Exhibition), கிராஃப்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா ஏற்பாடு செய்திருக்கிறது. ஜூன் 11 - 14 வரை நடைபெறும் இக்கண்காட்சியில் மென்மெத்தைகள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன.

மேற்கு வங்கம், குஜராத், கர்நாடக மாநிலங்களில் தயாரிக்கப் படும் பிரத்யேக மென்மெத்தைகள் இக்கண்காட்சியில் இடம்பெற்றிருக் கின்றன. மென்மெத்தைகள் தயாரிப்பின் மரபுகளைப் பதிவு செய்யும் கீதா கந்தேல்வாலின் ‘கோத்தாரிஸ் ஆஃப் மகாராஷ்ட்ரா’ புத்தகமும் இக்கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. “பெரும் பாலும் பெண்களே இந்த மென்மெத்தைகளைத் தயாரிக் கிறார்கள். அவர்களுக்கு இந்த கலை இயல்பாகவே கைவருகிறது”, என்கிறார் கீதா.

பாலாபோஷ், கந்தா, சதாகவுன் போன்ற மேற்குவங்கத்தின் மெத்தைகள், குஜராத் கட்ச் பழங்குடியினர் தயாரித்த மென்மெத்தைகள், மேக்வால் மென்மெத்தைகள் போன்றவை இக்கண்காட்சியின் சிறப்பம்சங்கள். டாக்டர் இஸ்மாயில் முகமது கத்ரியின் அஜ்ரக் மென்மெத்தைகள், 17-ம் நூற்றாண்டினல் போர்த்துகீசிய வாடிக்கை யாளர்களுக்காகத் தயாரிக்கப்பட்ட சத்கவுன் மென்மெத்தைகள் போன்ற வரலாற்று சிறப்புவாய்ந்த மென் மெத்தைகளும் இக்கண்காட்சியை அலங்கரிக் கின்றன. 3,000 ரூபாயில் இருந்து இந்த மென்மெத்தைகள் விற்பனைக்கு கிடைக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in