தலைவாழை: தமிழ்ப் புத்தாண்டு விருந்து - சேமியா பால் பாயசம்

தலைவாழை: தமிழ்ப் புத்தாண்டு விருந்து - சேமியா பால் பாயசம்
Updated on
1 min read

கொளுத்தும் கோடைக்கு நடுவில் நாம் இளைப்பாறக் கிடைத்த நாளாக இருக்கிறது சித்திரை மாதப் பிறப்பு. தமிழர்கள் பலரும் சித்திரை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர். அன்று பெரும்பாலானோர் வீடுகளில் அசைவ விருந்து கமகமக்கும். சித்திரையில் திரும்பும் திசையெங்கும் மலர்கள் பூத்துக் குலங்க, அவற்றுள் ஒன்றான வேப்பம்பூவில் பச்சடி செய்வோரும் உண்டு. சித்திரை முதல் நாளைச் சிறப்பிக்கும் வகையில் சேமியா பால் பாயசம் செய்யக் கற்றுத்தருகிறார் கும்பகோணத்தைச் சேர்ந்த ராஜபுஷ்பா. பாரம்பரிய உணவைக் காலத்துக்கு ஏற்ப புதிய முறையில் சமைப்பதில் வல்லவர் இவர்.

என்னென்ன தேவை?
வறுத்து உடைத்த சேமியா – அரை கப்
காய்ச்சிய பால் - அரை லிட்டர்
சர்க்கரை – முக்கால் கப்
நெய் - தேவையான அளவு
ஏலக்காய்த் தூள், குங்குமப்பூ - சிறிதளவு
முந்திரி, திராட்சை - தலா 15

எப்படிச் செய்வது?
அடுப்பில் கடாயை வைத்து அதில் சேமியாவைப் போட்டு லேசாகச் சூடுபடத்திக்கொள்ளுங்கள். பாலைக் கொதிக்க வைத்து அதில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு அதில் சேமியாவைச் சேர்த்து வேகவிடுங்கள். சேமியா வெந்ததம் சர்க்கரையைச் சேருங்கள். பின் ஏலக்காய்த் தூள், குங்குமப்பூ சேர்த்துக் கிளறுங்கள். பாயசம் பதத்திற்கு வந்ததும் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சையைச் சேர்த்துக் கலந்துவிட்டு இறக்குங்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in