

அன்பு சென்னை வாசகிகளே!
சிந்தனையைத் தூண்டும் கருத்தரங்கம், ஜாலியான போட்டிகள், அட்டகாசமான விளையாட்டுகள், கலை நிகழ்ச்சிகள் என்று காலை முதல் மாலை வரை கலகலக்கப் போகிறது சென்னை மகளிர் திருவிழா! இந்த விழாவில் ரங்கோலி, பாட்டுப்போட்டி இரண்டுக்கும் முன்கூட்டியே பதிவு செய்வது அவசியம். பதிவு செய்கிறவர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
‘ரங்கோலி’ போட்டியில் பங்கேற்க விரும்பும் வாசகிகள், ஒரு ரங்கோலியை வரைந்து, உங்கள் தொலைபேசி எண், முகவரியுடன் ‘பெண் இன்று ரங்கோலி போட்டி’ என்று குறிப்பிட்டு எங்களுக்கு அனுப்பி வையுங்கள். முகவரி: தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600002. penindru@thehindutamil.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம். கடைசி தேதி, பிப்ரவரி 23. தேர்ந்தெடுக்கப்படும் போட்டியாளர்களுக்குத் தகவல் அனுப்பப்படும்.
பாட்டுப் போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் வாசகிகள், 044-42890002 என்ற தொலைபேசி எண்ணுக்கு டயல் செய்து, உங்கள் குரல்வளத்தை வெளிப்படுத்தும் விதமாகச் சிறிய பாடல் ஒன்றைப் பாடுங்கள். தேர்ந்தெடுக்கப்படுகிறவர்களுக்கு தகவல் சொல்லப்படும்.
மனநலம் குறித்த கேள்விகளை 044-42890002 என்ற தொலைபேசி எண்ணுக்கு டயல் செய்து, பதிவு செய்யுங்கள். உங்கள் கேள்விகளுக்கு விழா மேடையில் பதில் தருவார் மனநல ஆலோசகர்.
இவை மட்டுமல்ல, முன்பதிவு செய்யாமல் கலந்துகொள்ளும் போட்டிகள் ஏராளம். போட்டியில் வெல்பவர்களுக்கு மட்டுமல்ல, பங்கேற்பவர்களுக்கும் பரிசுகள் காத்திருக்கின்றன! விழாவில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் பரிசு உண்டு.
நமக்கே நமக்கான ஒரு நாளில் பெண்கள் அனைவரும் சங்கமிப்போம். வாருங்கள் வாசகியரே, உங்கள் வருகைக் காக ஆவலுடன் காத்திருக்கிறது ‘பெண் இன்று’ குழு. உற்சாகத்துடன் கொண்டாடுவோம் மகளிர் திருவிழாவை!