50 வரங்கள்!

50 வரங்கள்!
Updated on
1 min read

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு தொடங்கிக் கர்ப்பிணிளுக்கான விழிப்புணர்வுவரை பெண்களின் உடல்நலனுக்காகப் பிரத்யேகமாக எம்.ஜி.எம்.ஹெல்த்கேர் மருத்துவமனை வளாகத்திற்குள் தொடங்கப்பட்டிருக்கும் சிறப்புப் பிரிவுக்கு `வரம்’ என்று பெயர் வைத்திருக்கின்றனர். இந்தத் திட்டத்தைப் பிரபலப்படுத்துவதற்காக இலக்கியம், நாடகம், திரைப்படம், விளையாட்டு, மாற்றுத்திறனாளி சாதனையாளர், மாற்றுப் பாலினத்தவராகச் சாதித்தவர், நாட்டியம், சமூக சேவை எனப் பல்வேறு பிரிவுகளில் நம் சமூகத்தின் வரங்களாகக் கருதப்படும் 50 பெண்களின் ஒளிப்படக் கண்காட்சியை மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே வைத்திருக்கின்றனர்.

எழுத்தாளர் வெண்ணிலா, கர்னாடக இசைப் பாடகி பாம்பே ஜெய, கலை இலக்கிய விமர்சகர் டாக்டர் தேவிகா, திரைப்பட இயக்குநர் ஹலிதா ஷமீம், ஆவணப்பட இயக்குநர் மற்றும் பால்புதுமையர் செயற்பாட்டாளர் மாலினி ஜீவரத்தினம் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளனர். புகைப்பட கண்காட்சியோடு பல துறைகளில் சாதனை படைத்திருக்கும் 50 பெண்களைப் பற்றிய சுவையான தகவல்களையும் சேர்த்து ஒரு புத்தகமும் வெளியிடப்பட்டிருக்கிறது.

“சாதனைப் பெண்களைக் கவுரவப்படுத்த வேண்டும் என்று தோன்றியவுடனேயே சமூகத்தில் கலை சார்ந்த வடிவங்களுக்குப் பெரிதும் உறுதுணையாகச் செயல்படும் எஸ்.பி.ஐ. எட்ஜ் அமைப்பின் எஸ்.எஸ்.ராம், ரத்தீஷ் கிருஷ்ண னிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைத்தோம். சாதனைப் பெண்களை வித்தியாசமான கோணத்தில் ஒளிப்படங்களாக எடுத்து அவர்களைப் பற்றிய விவரங்களை ‘ஸ்டூடியோ ஏ’வைச் சேர்ந்த பிரபல ஒளிப்படக் கலைஞர் அமர் ரமேஷ் தொகுத்துக் கொடுத்தார். சமூகத்தில் பதின்பருவத்தில் இருப்பவர்க ளுக்கு நம்முடைய சாதனைப் பெண்களை இந்த முறையில் அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்” என்றார் எம்.ஜி.எம். ஹெல்த்கேர் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ஊர்ஜிதா ராஜகோபாலன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in