

மாற்றுப் பாலினத்தவர் குறித்து மக்கள் மத்தியில் ஓரளவுக்கு விழிப்புணர்வு அதிகரித்துள்ளபோதும் அவர்கள் குறித்துப் பலருக்கும் ஏராளமான கேள்விகளும் குழப்பமும் இருக்கின்றன. அதற்கு விடைதரும் நோக்கமாகக் களமிறங்கியிருக்கிறார் ப்ரியா பாபு. இவர், மதுரை திருநங்கையர், திருநர், மாற்றுப் பாலினத்தவர் குறித்த ஆவணக் காப்பகத்தை நடத்திவருகிறார். தன்னுடைய டிரான்ஸ் மீடியா யூடியூப் அலைவரிசையில் 15 நாள்கள் 15 பதிவுகள் என்கிற நோக்கில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயத்தைப் பற்றி விளக்குகிறார்.
ஏப்ரல் 15 திருநர் தினமாகக் கொண்டாடப்படுவதன் பின்னணி, அதே நாள் தேசிய திருநர் தினமாகக் கொண்டாடப் படுவதன் பின்னணி, எழுத்துத் துறையில் முதன்முதலில் கால்பதித்தவர்கள், அவர்கள் எழுதியிருக்கும் நூல்கள், திருநர்களுக்கான வாக்குரிமை அவர்களின் சுயபாலின உரிமையோடு கிடைத்தது எப்படி, அதை எப்படிப் போராடிப் பெற்றனர், அரசியல் களத்தில் நின்ற திருநங்கை களைப் பற்றிய பதிவு, நாடகங்களில் திருநங்கைகளின் செயல்பாடுகள் பற்றிய பதிவு என ஒவ்வொரு தலைப்பில் ஒவ்வொரு வரலாற்றுச் சிறப்புமிக்க காணொலியை வெளியிடுகிறார் ப்ரியா பாபு. இது ஏப்ரல் 15 வரை தொடரும்.
- யுகன்
காணொலியைக் காண: https://cutt.ly/tcBRcxc