வெல்லும் சொல்: இது ஆண்களின் பிரச்சினை

வெல்லும் சொல்: இது ஆண்களின் பிரச்சினை
Updated on
1 min read

கடந்த ஆண்டு எத்தனை பெண்கள் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டார்கள் என்று நாம் பேசுகிறோம்; ஆனால், எத்தனை ஆண்கள், பெண்களை வல்லுறவு செய்தார்கள் என்று பேசுவதில்லை. பள்ளிச் சிறுமிகளில் கடந்த ஆண்டு எத்தனை பேர் பாலியல் சீண்டலுக்கு ஆளானார்கள் என்று பேசுகிறோம்; ஆனால், எத்தனை ஆண்கள், பள்ளிச் சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்கள் என்று பேசுவதில்லை. அமெரிக்காவின் வெர்மாண்ட் நகரில் எத்தனை பதின்பருவப் பெண்கள் கருவுற்றனர் என்று பேசுகிறோம்; ஆனால், எத்தனை ஆண்களும் பதின்பருவச் சிறுவர்களும் பெண்களைக் கருவுறச் செய்தனர் என்று பேசுவதில்லை. நம்முடைய இத்தகைய பேச்சு எப்படியான விளைவை ஏற்படுத்துகிறது என்று பாருங்கள். பெண்களிடம் தவறாக நடந்துகொண்ட சிறுவர்களையும் ஆண்களையும் விட்டுவிட்டு நாம் பெண்களை மட்டுமே கவனப்படுத்துகிறோம். ‘பெண்கள் மீதான வன்முறை’ என்பதே சிக்கலான பதம்தான். பெண்களுக்கு நடக்கும் மோசமான செயல் என்பதைத் தவிர இந்தப் பதத்தில் வேறொன்றுமே இல்லையே. ‘பெண்கள் மீதான வன்முறை’ என்பதில் ‘யாருமே வன்முறையை நிகழ்த்தவில்லை’ என்கிற பொருள்தானே வருகிறது. அது தானாகவே நடந்துவிட்டது. ஆணுக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்கிற அர்த்தமே தொனிக்கிறது.

- ஜாக்சன் கட்ஸ், அமெரிக்க எழுத்தாளர், கல்வியாளர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in