

தோழியின் வீட்டில் கல்வித் தொலைக்காட்சி ஒலிபரப்பாகிக்கொண்டிருந்தது. இரண்டு சிறுவர்கள் அமர்ந்து பாடம் படித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் யார் எனக் கேட்டதற்கு, வீட்டு வேலையில் உதவும் பெண்ணின் குழந்தைகள் என்றாள் தோழி. வீட்டில் இருவரும் தனியாக இருந்தால் சண்டையிட்டுக்கொள்வார்கள் என்பதால் அந்தப் பெண் வேலை முடிக்கும்வரை தொலைக்காட்சியில் பாடம் படிக்கட்டும் என்று அழைத்துவரச் சொல்லியிருக்கிறாள் தோழி. நல்லெண்ணத்துடன் இணைந்த அவளது சமயோசித எண்ணத்தைப் பாராட்டிவிட்டு வீடு திரும்பினேன்.
- தீ.அம்மணி, பெருமாள்புரம், திருநெல்வேலி.