

தொகுப்பு: அன்பு
உப்பு சத்தியாகிரகம் 90
இந்திய சுதந்திரப் போரில் பெண்களை அகிம்சை வழியாக ஒன்றுதிரட்டியதில் மகாத்மா காந்தியின் பங்கு அளப்பரியது.
பெண்கள் போராடுவதை ஏற்றுக்கொள்ளாத இந்தச் சமூகம் 90 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்திருக்கும்? அப்படிப்பட்ட சூழலில் காந்தி தன்னுடைய உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான பெண்களைப் பொதுவெளிக்கு வரச்செய்தார்.
1930 மார்ச் 12 அன்று அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் உப்பு சத்தியாகிரகம் தொடங்கியது.
இந்தப் போராட்டத்தில் காந்தியைச் சூழ்ந்திருந்தவர்கள் பெண்களே.
தங்களை அச்சுறுத்திய உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தை காந்தியை கைதுசெய்வதன் மூலம் முடிவுக்குக் கொண்டுவர முடியும் என பிரிட்டிஷ் அரசு நினைத்தது.
ஆனால், அவரின் கைதுக்குப் பிறகு சரோஜினி நாயுடு தலைமையில் நாடு முழுவதும் ஏராளமான பெண்கள் ஆங்காங்கே உப்பு சத்தியாகிரகத்தைத் தலைமையேற்று நடத்தி வரலாறு படைத்தனர்.