குளிர்கால குறிப்புகள்: குளிர்காலத்தில் தலைமுடியை பராமரிப்பது எப்படி?

குளிர்கால குறிப்புகள்: குளிர்காலத்தில் தலைமுடியை பராமரிப்பது எப்படி?
Updated on
1 min read

குளிர்காலத்தில் தலைமுடிக்கு நன்றாக எண்ணெய் தேய்த்து தலைவாருவது நல்லது.

வெங்காயம், கற்றாழை ஜெல், கறிவேப்பிலை, செம்பருத்தி இலை, மருதாணி ஆகியற்றை விழுதாக அரைத்து சூடான தேங்காய் எண்ணெய்யில் மிதமான சூட்டில் காய்ச்சி பயன்படுத்தினால் முடி உதிர்வதைத் தடுக்க முடியும். முடியும் நீளமாக வளரும்.

தலைக்குக் குளிப்பதற்கு ஒரு மணிநேரம் முன்பு தேங்காய் எண்ணெய்யை முடியில் தேய்த்து ஊறவைத்து பின்னர் குளிக்க வேண்டும். இதனால் பொடுகுத் தொல்லை நீங்கும்.

முடியின் வேர்ப் பகுதிகளில் வெடிப்பு ஏற்படுவதைத் தடுக்கத் சிறிது வெட்டிவிடுவது நல்லது.

முடிக்கு வண்ணம் பூசுவது, அயனிங் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

தலைக்கு அடிக்கடி ஷாம்பூ பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இதனால் முடி வறண்டு உதிரத் தொடங்கும்.

வாரத்துக்கு இரண்டு முறை தலைக்குக் குளிப்பது நல்லது.

தலைக்குக் குளித்த பிறகு ரசாயன கண்டிஷ்னர் பயன்படுத்துவதற்குப் பதில் தேங்காய்ப் பாலை கண்டிஷ்னராகப் பயன்படுத்தலாம்.

வறண்ட தலைமுடிக்கு முட்டையின் வெள்ளைக் கருவைத் தலையில் தேய்த்துக் குளித்தால் முடி பளபளப்பாக இருக்கும்.

தலைக்குக் குளித்த அடுத்த நாள் மருதாணி விழுதைத் தலையில் தேய்த்து வெறும் தண்ணீரில் அலசினால் முடி மிருதுவாக இருக்கும்.

ஈரமான தலைமுடியை நன்றாகக் காயவிட்ட பிறகே தலைவார வேண்டும்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in