

மிளகு சேர்க்கப்பட்ட காய்கறி சூப்பை அடிக்கடி குடித்துவந்தால் தொண்டைப்புண், வறட்டு இருமல், சளித் தொந்தரவு ஆகியவை குணமாகும்.
சூடான பாலில் பனங்கற்கண்டு, மஞ்சள் பொடி இரண்டையும் சேர்த்துக் குடித்துவர தொண்டைக்கு இதம் கிடைக்கும்.
தினமும் இரண்டு துளசி இலைகளை மென்று சாப்பிட்டுவந்தால் பனியில் வெளியே செல்வது குறித்த கவலை வேண்டாம்.
சைனஸ் தொந்தரவு உள்ளவர்கள் ஒரு டீஸ்பூன் விபூதியைத் தண்ணீரில் குழைத்து நெற்றி, மூக்கு, கண்ணின் கீழ்ப்பாகம் ஆகிய இடங்களில் பற்றுப்போட்டால், முகத்தில் கோத்திருக்கும் அதிகப்படியான நீர் வற்றிவிடும். மூக்கடைப்பும் சளித்தொல்லையும் நீங்கும்.
இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு, எலுமிச்சைச் சாறு ஆகிய மூன்றையும் சம அளவில் கலந்து மூன்று வேளை சாப்பிட்டுவந்தால் சளியும் இருமலும் மூன்றே நாட்களில் காணாமல் போய்விடும்.
சிலருக்குக் குளிர்காலத்தில் கால்கள் வறண்டு வெடிப்பு ஏற்படும். அதைத் தவிர்க்க தினமும் இரவில் உறங்கும் முன் பாதங்களில் ஆலிவ் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்யலாம். வேப்பிலை, மருதாணி, மஞ்சள் மூன்றையும் அரைத்துப் பூசினாலும் பாத வெடிப்பு குணமாகும்.
- தேவி, சென்னை.