வெற்றி மொழி: டபிள்யூ. இ. பி. டு போய்ஸ்

வெற்றி மொழி: டபிள்யூ. இ. பி. டு போய்ஸ்
Updated on
1 min read

1868-ம் ஆண்டு முதல் 1963-ம் ஆண்டு வரை வாழ்ந்த டபிள்யூ. இ. பி. டு போய்ஸ் அமெரிக்காவைச் சேர்ந்த சமூகவியலாளர், வரலாற்றாசிரியர், சிவில் உரிமைகள் ஆர்வலர், ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் ஆவார். புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திலிருந்து முனைவர் பட்டம் பெற்ற முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர் என்னும் பெருமைக்கு சொந்தக்காரர்.

அட்லாண்டா பல்கலைக்கழகத்தில் வரலாறு, சமூகவியல் மற்றும் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். சிறந்த எழுத்தாளரான இவர், தனது கட்டுரைத் தொகுப்புகளுக்காகப் பெரிதும் அறியப்படுகிறார். அணு ஆயுதக் குறைப்பு ஆதரவாளர் மற்றும் தீவிர அமைதி ஆர்வலராக விளங்கியவர்.

# விதிமுறைகளைப் பின்பற்றுதல், சட்ட முன்னுரிமை மற்றும் அரசியல் நிலைத்தன்மை ஆகியவை உரிமை, நீதி மற்றும் தெளிவான பொதுஅறிவு ஆகியவற்றை விட முக்கியமானதல்ல.
# கல்வியும் வேலையும் மக்களை மேம்படுத்துவதற்கான நெம்புகோல்கள்.
# கல்வி வெறுமனே வேலையை கற்பிக்கக் கூடாது – அது வாழ்க்கையை கற்பிக்க வேண்டும்.
# பெருமளவில் பலவீனமான மற்றும் பயிற்சியற்ற மனதைத் தூண்டுவது என்பது வலிமையான தீயுடன் விளையாடுவதைப் போன்றது.
# கல்வி என்பது சக்தி மற்றும் இலட்சியத்தின் வளர்ச்சி ஆகும்.
# சுதந்திரத்தின் விலை அடக்குமுறையின் விலையை விட குறைவானது.
# நீங்கள் கற்பிப்பதை விட, நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதிலிருந்தே குழந்தைகள் அதிகம் கற்றுக்கொள்கிறார்கள்.
# வாழ்க்கையை நம்புங்கள்! எப்போதும் மனிதர்கள் உயர்ந்த, பரந்த மற்றும் முழுமையான வாழ்க்கைக்கு முன்னேறுவார்கள்.
# அறியாமையானது எதற்கும் ஒரு தீர்வாகாது.
# லட்சியங்கள் இல்லாமல் முன்னேற விரும்பும் ஒரு தலைமுறைக்கு நாம் வந்துள்ளோம்.
# சிந்தனையாளர் சத்தியத்துக்காக சிந்திக்க வேண்டும், புகழுக்காக அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in