தலைவாழை: மாவா கச்சோரி (ராஜஸ்தான்)

படங்கள்: பு.க.பிரவீன்
படங்கள்: பு.க.பிரவீன்
Updated on
1 min read

தொகுப்பு: ப்ரதிமா

மாவா கச்சோரி (ராஜஸ்தான்)

என்னென்ன தேவை?

பால்கோவா – 1 கப்
மைதா – 1 கப்
ஏலக்காய்த் தூள் – அரை டீஸ்பூன்
குங்குமப்பூ – 2 சிட்டிகை
உப்பு – ஒரு சிட்டிகை
நெய் – பொரிக்கத் தேவையான அளவு
சர்க்கரை – கால் கப்
வெண்ணெய், பால் பவுடர் – தலா 2 டீஸ்பூன்
பொடித்த பாதாம், முந்தரி – 4 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

மைதாவுடன் சிட்டிகை உப்பு, இரண்டு டீஸ்பூன் நெய், தேவையான அளவு தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து, பூரி மாவு பதத்துக்குப் பிசைந்து மூன்று மணி நேரம் ஊறவிடுங்கள். பால்கோவாவுடன் அரை டீஸ்பூன் ஏலக்காய்த் தூள், பொடித்த சர்க்கரை, வெண்ணெய், பால் பவுடர் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளுங்கள்.

இதைச் சிறு உருண்டைகளாக உருட்டி, பொடித்து வைத்துள்ள பாதாம், முந்திரியை உள்ளே வைத்து மூடுங்கள்.
ஊறிய மைதா மாவைப் பூரிபோல் சிறியதாகத் திரட்டி நடுவில் பால்கோவா உருண்டையை வைத்து மூடி லேசாகத் திரட்டுங்கள். இதை நெய்யில் போட்டு, மிதமான தணலில் பொறுமையாகப் பொரித்தெடுங்கள். பொடித்த சர்க்கரையையும் குங்குமப்பூவையும் மேலே தூவிப் பரிமாறுங்கள்.

- ர.கிருஷ்ணவேணி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in