

தொகுப்பு: ப்ரதிமா
மனதுக்கு உவப்பான தருணங்களையும் மகிழ்ச்சி தரும் நிகழ்வு களையும் இனிப்புடன்தான் பலரும் கொண்டாடுவார்கள். புதிய செயலைத் தொடங்கும் போதும் சிலர் இனிப்புடன் தொடங்குவார்கள். வேறு மாநில உணவு வகைகளின் தேடலையும் இனிப்பில் இருந்தே தொடங்கலாம் என்கிறார் சென்னை நொளம்பூரைச் சேர்ந்த ர.கிருஷ்ணவேணி. பிற மாநிலங்களின் இனிப்பு வகைகளைத் தெரிந்து கொள் வதன்மூலம் இந்தியாவின் பன்முகத்தன்மையை உணரலாம் என்று சொல்லும் அவர், சில மாநிலங்களின் இனிப்பைச் செய்யக் கற்றுத் தருகிறார்.
டிக்ரி (ஜார்கண்ட்)
என்னென்ன தேவை?
பாதாம், பிஸ்தா, வால்நட், முந்திரி, உலர்ந்த திராட்சை – தலா 10
சர்க்கரை – அரை கப்
சோம்பு – 2 டீஸ்பூன்
மைதா – 1 கப்
பேக்கிங் சோடா, உப்பு - தலா 2 சிட்டிகை
தயிர் – 1 கப்
நெய் – 10 டீ ஸ்பூன்
எப்படிச் செய்வது?
மைதாவுடன் பேக்கிங் சோடா, உப்பு, இரண்டு டீஸ்பூன் நெய், தயிர் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து மூடிவையுங்கள். சர்க்கரையுடன் சோம்பு சேர்த்துப் பொடித்துக்கொள்ளுங்கள். ஊறிய மாவை மெலிதாகத் திரட்டி, சூடான தோசைக்கல்லில் போடுங்கள். சுற்றிலும் நெய்விட்டுத் திருப்பிப்போட்டு வேகவையுங்கள். அரைத்து வைத்துள்ள பழக்கலவையை கால் அங்குலத்துக்குத் தடவி, பாய்போல் சுருட்டுங்கள். இதன்மேல் சர்க்கரையைத் தூவி, பாதாம் பாலை ஊற்றிப் பரிமாறுங்கள்.
- ர.கிருஷ்ணவேணி