Published : 12 Aug 2019 03:00 PM
Last Updated : 12 Aug 2019 03:00 PM

குறிப்புகள் பலவிதம்

* திராட்சை சாற்றை முகத்திலும் கழுத்திலும் தடவி 20 நிமிடங்களுக்குப் பிறகு கழுவினால் சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும்.

* தாய்ப்பால் சுரக்காத பெண்கள் அதிமதுரப் பொடியைப் பாலுடன் கலந்து குடித்துவந்தால் தாய்ப்பால் பெருகும்.

* குழந்தை பெற்ற பெண்களுக்கு வெள்ளைப் பூண்டை நல்லெண்ணெய்யில் வதக்கி அதனுடன் கருப்பட்டியுடன் கலந்து சாப்பிடக் கொடுத்தால் தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும்.

* பப்பாளிக் காயைக் கூட்டு செய்து சாப்பிட்டால் பால் அதிகமாகச் சுரக்கும்.

* பச்சைப் பயறு மாவுடன் தேனையும் பன்னீரையும் சேர்த்துக் கலந்து முகத்தில் இட்டு, அரை மணி நேரம் கழித்துக் கழுவினால் முகம் பளிச்சிடும்.

* சின்ன வெங்காயத்தை நெய்யில் வதக்கி நன்கு மெழுகு போல் அரைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை எனத் தினமும் இரு வேளை ஒரு டீஸ்பூன் அளவுக்குச் சாப்பிட்டுவந்தால் அடிவயிற்றுச் சதை குறையும்.

* காதில் கம்மல் போடும் இடத்தில் புண் இருந்தால் கடுக்காயையும் மஞ்சளையும் அரைத்துப் பூசிவர விரைவில் ஆறிவிடும்.

* தயிரைத் தலைக்குத் தேய்த்து ஊறியபின் சீயக்காய்த் தூள் போட்டுக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும்.

* மஞ்சளையும் வேப்பிலையையும் அரைத்துப் பூசி வந்தால் கரப்பான் புண்கள் விரைவில் ஆறும்.

* கருஞ்சீரகத்தை நீரில் ஊற வைத்து அந்தத் தண்ணீரில் வாய் கொப்பளித்தால் பல் வலி நீங்கும்.

- கவிதா பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x