Published : 26 Jul 2015 12:07 PM
Last Updated : 26 Jul 2015 12:07 PM

குறிப்புகள் பலவிதம்: நலம் தரும் துவர்ப்பு!

* உருளைக் கிழங்கை அரிசி கழுவிய‌ தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊற‌வைத்துப் பிறகு பயன்படுத்தினால் சுவையாக‌ இருக்கும்.

* கோதுமையைக் கழுவி உலர்த்தி, நன்றாக‌ வறுக்கவும். அதை மாவாக‌ அரைத்து வைத்துக்கொண்டால் தேவையானபோது அரிசி மாவு புட்டு செய்வதுபோல் கோதுமை மாவு புட்டு செய்யலாம்.

* பாயசத்தில் முந்திரிக்குப் பதிலாக‌ வேர்க்கடலையை நெய்யில் வறுத்துச் சேர்த்தால் சுவையாக இருக்கும்.

* காபி பொடியுடன் ஒரு கல் உப்பு போட்டு டிக்காஷன் வைத்தால் ஸ்ட்ராங்கான‌ டிக்காஷன் கிடைக்கும்

- மாலினி ராம், சென்னை.

* கொளுத்தும் வெயிலில் பலருக்கும் நாக்கு வறண்டுவிடும். மண்பானையில் தண்ணீர் ஊற்றி வைத்து, அதில் முற்றாத எலுமிச்சை இலைகளைப் போட்டு வைத்துக் குடித்தால், நா வறட்சி மட்டுப்படும்.

* வெட்டிவேர் குளிர்ச்சி தரக்கூடியது, அதையும் மண்பானை நீரில் போட்டு, குடிக்கலாம்

* தர்ப்பூசணி பழத்தை நிறைய சாப்பிட வேண்டும். அதன் வெண்மைப் பகுதியைக் கூட்டாகவோ பச்சடியாகவோ செய்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.

* மூன்று கட்டு புதினா இலைகளை நன்கு அலசி ஒரு விரல் நீள இஞ்சித் துண்டு சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீருடன் அரைத்து வடிகட்டி, ஃபிரிட்ஜில் வைத்துக்கொள்ளுங்கள். வெயிலில் அலைந்துவிட்டு வந்த களைப்பு தீர ஒரு டம்ளர் நீரில் ஒரு டீஸ்பூன் ஜூஸ், சிறிது உப்பு, மிளகுத் தூள் சேர்த்துப் பருக, உடனடி தெம்பு கிடைக்கும். இதையே மிளகுத் தூள் தவிர்த்து மோரிலும் கலந்து பருகலாம்.

- இந்திராணி பொன்னுசாமி, சென்னை.

* வாழைத் தண்டைத் தொடர்ந்து சாப்பிட்டுவர சிறுநீர் தாராளமாகப் பிரியும். மலச் சிக்கல் நீங்கும். நரம்புச் சோர்வு நீக்கும்.

* வாழைத் தண்டு சாற்றை 50 மி.லி வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால், வாய் ஓயாமல் ஏற்படும் இருமல் நீங்கும்.

* கோழைக் கட்டை இளகச் செய்யும் பண்பு வாழைத் தண்டுக்கு உண்டு.

* வாழைப்பூவில் துவர்ப்பு இருந்தால் சுவையிருக்காது என்று நினைத்துப் பலரும் அதைத் தண்ணீரில் பலமுறை அலசிவிடுகிறார்கள். அதன் சத்து அனைத்தையும் சாக்கடைக்கு அனுப்பிவிட்டு, பிறகு சமைக்கிறார்கள். ஆனால் அந்தத் துவர்ப்பு இருந்தால் ஊட்டச் சத்து வீணாகாமல் உடம்புக்கு ‘பி’ வைட்டமின் கிடைக்கிறது.

- கே. சுபாஷினி ஷர்மா, தர்மபுரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x