கேளாய் பெண்ணே: ஆறு மாதத்தில் அக்குபங்க்சர்

கேளாய் பெண்ணே: ஆறு மாதத்தில் அக்குபங்க்சர்
Updated on
1 min read

நான் கம்ப்யூட்டர் சயின்ஸ் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறேன். இப்போது அக்குபங்க்சர் படிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால், சென்னையில் எங்கே படிப்பது என்று குழப்பத்தில் இருக்கிறேன். சென்னையில் அக்குபங்க்சர் படிப்பதற்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள் இருக்கின்றனவா?

- வித்யா, சென்னை.

டாக்டர் ஆர்ம்ஸ்ட்ராங், ஆல் தமிழ்நாடு அக்குபங்க்சர் அண்ட் ஆல்டர்நேடிவ் மெடிக்கல் ஆசோசியேஷன் மாநில துணை இயக்குநர் (ATAMA), சென்னை.

தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக் கழகம், அண்ணாமலை பல்கலைக் கழகம் போன்ற பல்கலைக் கழகங்கள் அக்குபங்க்சர் அறிவியலில் டிப்ளோமா, முதுகலை டிப்ளோமா படிப்புகளை வழங்குகின்றன. அதே மாதிரி ஆல் தமிழ்நாடு அக்குபங்க்சர் அண்ட் ஆல்டர்நேடிவ் மெடிக்கல் ஆசோசியேஷன் (ATAMA) நிறுவனமும் அக்குபங்க்சரில் ஆறு மாத டிப்ளோமா படிப்பையும், ஒன்றரை வருட முதுகலைப் பட்டப் படிப்பையும் வழங்குகின்றது. சென்னையில் வண்ணாரப்பேட்டை, பல்லாவரம், ஆலந்தூரில் இந்த நிறுவனத்தின் கிளைகள் செயல்படுகின்றன.

எனக்கு அதிகமாகத் தலைமுடி உதிர்கிறது. அத்துடன் வறண்டும் காணப்படுகிறது. கூந்தலை ஆரோக்கியமாகப் பராமரிக்க வழி சொல்லுங்கள்.

- பார்வதி

சஜி ஜார்ஜ், மூத்த தொழில்நுட்ப ஆலோசகர், மேட்ரிக்ஸ் (லோரியல் இந்தியா பிரைவேட் லிமிடெட்).

கூந்தலைப் பராமரிக்கச் சரியான ஷாம்பூ, ஹேர் சீரம் (Hair Serum), கண்டீஷனர்கள் போன்றவற்றைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்த வேண்டும். கூந்தல் வெயிலால் பாதிக்கப்படாமல் இருக்கவும், சிடுக்கில்லாமல் இருக்கவும் ஹேர் சீரம் உதவும். ஆனால், இவை கூந்தலை சாதாரணமாகப் பராமரிக்க உதவுமே தவிர கூந்தல் ஆரோக்கியத்துக்கும் இதற்கும் தொடர்பில்லை. முடி உதிர்வதற்கு என்ன காரணம் என்பதைத் தெரிந்தகொள்ள டிரைக்காலஜிஸ்டை அணுகவும். உங்கள் கூந்தலில் பி.எச். அளவு சரியாக இருக்கிறதா போன்ற விவரங்களைத் தெரிந்துகொள்வது முக்கியம். ஹேர் ஸ்பாவையும் முயற்சிக்கலாம். ஹேர் டிரையரைத் தொடர்ந்து பயன்படுத்துவதும் கூந்தலைப் பாதிக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in