வேர்க்குருவைப் போக்கும் எலுமிச்சை

வேர்க்குருவைப் போக்கும் எலுமிச்சை
Updated on
1 min read

# சமையலில் ருசியைக் கூட்டுகிற ஐட்டம் உருளைக்கிழங்கு என்பது அனைவருக்கும் தெரி்யும். உருளைக்கிழங்கின் தோலை நீக்கிப் பொடியாக நறுக்கி வெயிலில் மொறுமொறுப்பாகக் காயவைத்து பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்த உருளை ஸ்டார்ச் பவுடர், ஒரு அற்புதமான அழகுக்கலை நிபுணர். உருளைக்கிழங்கில் உள்ள ஸ்டார்ச், தோலை மிருதுவாக்கும், கூந்தலைப் பளபளப்பாகும்.

# வெயில் காலங்களில் வெளியில் போய் வந்ததுமே பலருக்குத் தலைவலி வந்துவிடும். இந்தத் தலைவலியைப் போக்கச் சரியான மருந்து எலுமிச்சை. எலுமிச்சை பழத் தோலை நன்றாக வெயிலில் காயவைத்து அரைத்து பவுடராக்கி வைத்துக்கொள்ளவும். தலைவலி வரும்போது இந்தப் பவுடரைத் தண்ணீரில் விழுதாகக் கரைத்து வலிக்கும் இடங்களில் தடவவும். இந்தப் பசை உலரும்போது தலைவலி காணாமல் போய்விடும்.

# எலுமிச்சையைச் சாறு பிழிந்து அந்தச் சாற்றில் சந்தனத்தை அரைத்துத் தடவ, வேர்க்குருவும் வேனற்கட்டிகளும் சரியாகிவிடும்.

# எலுமிச்சை விதைகளைப் பசை போல அரைத்து அதைத் தொப்புளைச் சுற்றித் தடவிவிட்டு ஐந்து நிமிடம் கழித்து அங்கு குளிர்ச்சியான தண்ணீர் ஊற்றினால் கோடை காலத்தில் வரும் நீர்ச்சுருக்கு சரியாகும்.

# ஜலதோஷத்தில் இருந்து மீள எலுமிச்சம் பழத்தைத் தண்ணீரில் போட்டுப் பத்து நிமிடங்களுக்குக் கொதிக்கவிடுங்கள். ஆறியதும் அதை எடுத்துச் சாறு பிழியுங்கள். அதனுடன், இரண்டு டேபிள்ஸ்பூன் கிளிசரின் விட்டு நன்கு கலக்கி, கொஞ்சம் கொஞ்சமாக ‘இருமல் சிரப்’ மாதிரி குடிக்கலாம்.

- ஆர். மங்கையர் திலகம்,
மந்தித்தோப்பு, கோவில்பட்டி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in