Published : 22 Mar 2015 12:56 PM
Last Updated : 22 Mar 2015 12:56 PM

குறிப்புகள் பலவிதம்: மின் கட்டணத்தைக் குறைக்கணுமா?

* கோடை காலம் தொடங்கிவிட்டது. ஃப்ரிட்ஜின் தேவை இந்தக் காலத்தில்தான் அதிகமாக இருக்கும். ஃப்ரிட்ஜை அதிகமாகப் பயன்படுத்துவது போலவே அதைப் பராமரிக்கவும் நேரம் ஒதுக்க வேண்டும்.

* சூரியஒளி படாத இடத்தில் ஃப்ரிட்ஜை வைக்க வேண்டும். சமையல் அறையில் வைக்காமல் இருப்பது நல்லது.

* சுவரில் இருந்து ஆறு அங்குல இடைவெளி விட்டு வைக்க வேண்டும். ஃப்ரிட்ஜின் பின்பகுதியில் இருக்கும் ‘கூலர்’ குழாய்களில் காற்றோட்டம் கிடைக்க இந்த இடைவெளி அவசியம். வெப்பத்தை வெளியிடும் கருவிகளுக்கு அருகில் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

* கூலர் காயிலில் படிகிற தூசுகளை அவ்வப்போது நீக்க வேண்டும்.

* எளிதாக மோசமாகி விடும் உணவுப் பொருட்களை ஃப்ரீஸரின் அருகில் இருக்கும் தட்டில் வைத்துப் பாதுகாக்கவும்.

* உணவு வகைகளைச் சூடு ஆறிய பின்பே ஃப்ரிட்ஜினுள் வைக்க வேண்டும். சூடான உணவுகளை உள்ளே வைத்தால் சீக்கிரமாக குளிர்பதனப் பெட்டி மோசமாகிவிடும்.

* வாரத்தில் ஒரு முறையாவது ஃப்ரீஸரில் இருக்கும் பனிக்கட்டியை ‘டீ ஃப்ராஸ்ட்’ செய்ய வேண்டும்.

* ஃப்ரிட்ஜின் முன்னால் ஒரு ரப்பர் ஷீட்டை விரித்து வையுங்கள். அதன் மேல் நின்றுதான் ஃப்ரிட்ஜைத் திறக்கவோ, அடைக்கவோ வேண்டும். இவ்வாறு செய்தால் விபத்து எதுவும் ஏற்படாது.

* ஃப்ரிட்ஜின் நிறம் மங்கினால் அதன் வெளிப்பகுதியை குளியல் சோப் பயன்படுத்திக் கழுவலாம். பின்பு துடைத்துவிட்டு சிலிக்கான் பாலீஷ் உபயோகித்து பாலீஷ் செய்தால் புதிது போல் ஆகிவிடும்.

* ஃப்ரிட்ஜினுள் பொருட்கள் வைக்கும்போது பொருட்களிடையே போதிய காற்றோட்டம் இருக்கும் வகையில் வைக்க வேண்டும்.

* எந்தப் பொருளை வெளியே எடுக்க வேண்டும் எனத் தீர்மானித்தபிறகே ஃப்ரிட்ஜைத் திறக்க வேண்டும். அப்படிச் செய்வதால் ஃப்ரிட்ஜை அதிக நேரம் திறந்துவைப்பத்தைத் தவிர்க்கலாம்.

* மிகவும் சூடான மற்றும் வெதுவெதுப்பான உணவுப் பொருட்களை அறையின் வெப்ப நிலைக்குக் கொண்டு வந்து அவற்றை நன்கு மூடி, ஃப்ரிட்ஜூக்குள் வைக்க வேண்டும். இப்படிச் செய்வதால் மின்சக்தி குறைந்த அளவு பயன்படுத்தப்படுவதோடு அந்தப் பொருள் குளிரூட்டப்படும் நேரமும் குறைகிறது.

* ஃப்ரிட்ஜின் கண்டன்ஸர் காயில் மீது அதிக தூசு படிந்தால், அதன் மோட்டார் மிகவும் கடினமாக இயங்குவதோடு, அதிக மின்சக்தியையும் பயன்படுத்துகிறது. எனவே கண்டன்ஸர் காயில் நல்ல காற்றோட்டம் ஏற்படும் வண்ணம் அவ்வப்போது சுத்தம் செய்யப்பட வேண்டும்.

- நன்றி: ‘பெண்களுக்குப் பயனுள்ள டிப்ஸ்’ புத்தகம், அருணா பப்ளிகேஷன்ஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x