

பெண்கள் புதிதாக வேலைக்குச் செல்லும் இடம் அவர்களுக்கு உகந்ததா என்பதைத் தெரிந்துகொள்ள >http://www.inhersight.com என்னும் இணையதளத்தை அமெரிக்காவில் தொடங்கியிருக்கிறார்கள்.
“பெண்களுக்குப் பாதுகாப்பான வேலைச்சூழலை அளிப்பதன் அடிப்படையில் நிறுவனங்களுக்கு நாங்கள் மதிப்பெண் கொடுக்கிறோம். அதை பகிரங்கமாக எங்கள் இணையதளத்தில் வெளியிடுகிறோம்.
இதன் மூலம் அந்த நிறுவனங்களை பதில்சொல்லும் கடமை உள்ளவர்களாக மாற்றுகிறோம்” என்கிறார் அந்த இணையதளத்தின் நிறுவனர் ஊர்சுலா மீட்.
வேலை நேரங்களில் கடுமை இல்லாமை, பிரசவகால விடுப்பு, பெண்களுக்கு நிர்வாக வாய்ப்புகள் மற்றும் சம்பள ரீதியான திருப்தி ஆகிய பல அம்சங்களை முன்வைத்து குறிப்பிட்ட நிறுவனங்களின் முன்னாள் மற்றும் இந்நாள் ஊழியர்கள் செய்யும் மதிப்பீடுகளிலிருந்து இந்த ரேட்டிங் அளிக்கப்படுகிறது.
அத்துடன் அவர்களின் அடையாளமும் பாதுகாக்கப்படுகிறது.