கொடியில் மறைந்த பூசணி

கொடியில் மறைந்த பூசணி
Updated on
1 min read

எங்கள் வீட்டில் ஒரு பூசணிக்கொடி தோட்டம் முழுவதும் படர்ந்திருந்தது. கொடியில் இலைகளும் பூவும் நிறைந்திருந்ததே தவிர காயே இல்லை. அதனால் தோட்டத்தைச் சுத்தம் செய்யும்போது, பூசணிக்கொடியை வெட்டிக்கொண்டே வந்தோம். அப்போது கொடியில் நான்கைந்து பூசணிக்காய்கள் நன்றாக வளர்ந்து, சாம்பல் பூத்திருந்தன. கொடியை வேறு பாதி வெட்டிவிட்டோமே என்ன செய்வதென்று புரியாமல் ஒரு தோட்டக்காரரை அழைத்து வந்தோம்.

அவர், “ஒவ்வொரு செடிக்கும் ஒவ்வொரு சீஸன் உண்டு. அவை பூத்துக் காய்க்கும் காலம் தவிர மற்றக் காலங்களில் அவற்றின் இலை, கிளைகளை வெட்டிவிடலாம். வேரை மட்டும் அறுக்கக் கூடாது” என்று சொன்னார். மஞ்சள் பூசணி, அவரைக்காய் போன்றவை மார்கழியிலும், சுண்டைக்காய், கீரை வகைகள், தக்காளி ஆகியவை பங்குனி, சித்திரையிலும் பலன் தரும் என்றும் அவர் சொன்னார். பூச்செடிகளும் இதே வழிமுறைதான் என்று விளக்கினார்.

அவர் வழிகாட்டுதலின்படி நாங்களும் பருவக்காலத்துக்கு ஏற்ற மாதிரி செடிகளைப் பராமரிக்கிறோம். ஆண்டு முழுவதும் பசுமையாக இருக்கிறது எங்கள் வீட்டுத் தோட்டம்.

- எஸ். ராஜகுமாரி, போரூர், சென்னை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in