சேனல் சிப்ஸ்: பேச்சுதான் பொழுதுபோக்கு!

சேனல் சிப்ஸ்: பேச்சுதான் பொழுதுபோக்கு!
Updated on
1 min read

சின்னத்திரை தொகுப்பாளினியாக வலம்வந்த ஷனோ, தற்போது 91.9 ஃபீவெர் எஃப்.எம். சேனலில் கலகலப்பான நிகழ்ச்சிகளை வழங்கும் ஆர்.ஜேவாக மாறியிருக்கிறார். “பேசிக்கிட்டே இருக்கணும். அதுவும் ஜாலியா, காமெடியா பேசிக்கிட்டே இருக்கணும். அதுதான் என்னோட பொழுதுபோக்கு. அதுக்குப் பொருத்தமான வேலை ஆர்.ஜே. மருத்துவம், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் என்று சின்னத்திரை நிகழ்ச்சிகள் வழங்கினாலும்

ஆர்.ஜே. வேலை மீது எப்போதும் தனி ஆர்வம் இருக்கவே செய்தது. சரியான சூழ்நிலையில் ஃபீவெர் எஃப்.எம்மில் மாலை நேரத்துல வர்ற ‘லூஸ் கன்ட்ரோல்’ நிகழ்ச்சியைக் கையில் எடுத்தேன். காமெடி, கலகலப்புக்குப் பஞ்சமே இல்லை. நிகழ்ச்சியோட சேர்ந்து என் வாழ்க்கையும் ஜாலியாக நகர்கிறது!’’ என்கிறார் ஷனோ.

ரீல் அந்து போச்சு!

விஜய், புது யுகம் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினி, நடனம் என்று வட்டமடித்து வந்த ஸ்ரீரஞ்சனி, திருமணத்துக்குப் பிறகு யுடியூப் சேனல், திரைப்பட புரமோஷன் என்று பரபரப்பாகி விட்டார்.

“சமூக வலைத்தள சேனல்களோட வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்துகிட்டே இருக்கு. நம்மோட பங்கும் அதுல இருக்கணுமேன்னு உள்ளே வந்துட்டேன். ‘மெட்ராஸ் சென்ட்ரல்’ என்ற யுடியூப் சேனலில் ‘ரீல் அந்து போச்சு’ன்னு ஒரு காமெடி நிகழ்ச்சியை இப்போ வழங்கிட்டு இருக்கேன். அதோடு, ரிலீஸாகும் புதிய படங்களை ஃபேஸ்புக், டிவிட்டர் தளங்களில் புரொமோஷன் செய்யும் கிரியேடிவிட்டி வேலையையும் கையில் எடுத்துள்ளேன். சென்னை 28 இரண்டாம் பாகம், அதே கண்கள், முப்பரிமாணம்னு படங்களை முடித்துவிட்டு இப்போ கடம்பன் உள்ளிட்ட படங்களின் வேலைகளைச் செய்துவருகிறோம். சின்னத்திரையில் மகாபாரதம், கல்யாணம் முதல் காதல்வரை தொடர்களில் கலக்கிய காதல் கணவர் அமீத் பார்கவ், ‘கர்ஜனை’ படத்தில் அழகான ஒரு ரோலில் நடித்துக்கொண்டிருக்கிறார்!’’ என்கிறார், ஸ்ரீரஞ்சனி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in