

சன் மியூசிக் சேனலில் ‘கஃபே டீ ஏரியா’ நிகழ்ச்சியை சுரேஷ், அஞ்சனா குழுவினர் அசத்தலாக வழங்கி வருகிறார்கள். காலெர் சீக்மெண்ட்ஸ், மசாலா டீ, கோலிவுட் நியூஸ், ட்வீட்டுக்குப் பாட்டு என்று விறுவிறுப்பாக ஒரு மணி நேரம் நகரும் இந்த நிகழ்ச்சியைப் பற்றி அஞ்சனாவிடம் கேட்டோம்.
“நிகழ்ச்சி ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே பெரிய அளவில் டி.ஆர்.பி. கிடைத்துவிட்டது! தயாரிப்பாளர் கவின், நான், தொகுப்பாளர் சுரேஷ் பங்களிப்புக்கு நல்ல வரவேற்பு! வழக்கம் போல ஒரு மணி நேர நேரடி நிகழ்ச்சியாக இதை வழங்காமல், வெரைட்டி காட்டியதால்தான் இந்த ஷோ ஹிட். சுரேஷும் நானும் தொகுப்பாளர்களாக வந்து எட்டு ஆண்டுகள் ஆகின்றன. எங்கள் அனுபவத்துக்கு முத்திரையாக ‘லைவ்னெஸ் ஷோ’ என்ற பெயரோடு இந்த நிகழ்ச்சி அமைந்ததில் ஹேப்பி!’’ என்கிறார் அஞ்சனா.
கர்நாடகாவில் சிக்கிய சித்து!
சன் டிவியில் ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’, ஜீ தமிழ் சேனலில் ‘டார்லிங் டார்லிங்’ என்று காமெடி சீரியல்களில் அசத்தி வரும் சித்து, சமீபத்தில் பெங்களூருவுக்கு ஷூட்டிங் சென்று, பெரும்பாடுபட்டுத் திரும்பியிருக்கிறார்.
“டார்லிங் டார்லிங் சீரியலுக்காக பெங்களூரு போயிருந்தேன். காவிரி பிரச்சினையால் அங்கே ஸ்ட்ரைக் விஸ்வரூபம் எடுத்தது. தமிழர்களைத் தேடித் தாக்குதல் நடத்தினார்கள். என் கண் முன்னாடியே பல கார்கள் உடைத்து நொறுக் கப்பட்டன.
என் காரை மீட்டு வருவதற்குள் பெரும் பாடாக ஆகிவிட்டது. அங்கே இருந்த தமிழர்கள் பாவம்!’’ என்று வருத்தத்துடன் சொன்னார் சித்து.