

ஐஸ்வர்யா ராய் பச்சன் உலகின் சிறந்த அழகிகள் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்திருக்கிறார். 40 வயதைக் கடந்து, ஒரு குழந்தைக்குத் தாயான பிறகும் அவர் உலக அழகியாகவே இருக்கிறார்.
உலகின் சிறந்த அழகிகள் குறித்து ஹாலிவுட் பஸ் என்னும் இணைய இதழ் கருத்துக் கணிப்பு நடத்தியது. அந்தக் கணிப்பில் முதலிடம் பெற்ற 30 பெண்களின் பட்டியலை அவ்விதழ் வெளியிட்டது. இதில் ஐஸ்வர்யா ராய்க்கு நான்காவது இடம் கிடைத்திருக்கிறது.
இத்தாலிய நடிகை மோனிக்கா பெலுச்சி, அமெரிக்க நடிகையும் மாடலுமான கேட் உப்டன், ஹாலிவுட் ஸ்டார் ஏஞ்சலினா ஜோலி ஆகியோருக்கு அடுத்த இடம் ஐஸ்வர்யாவுக்கு.
இந்தக் கணிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட்டது. 40 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இதில் வாக்களித்தார்கள். 2013 – 14ஆம் ஆண்டின் அறிவுக் கூர்மை கொண்ட, விரும்பத்தகுந்த, வெற்றிகரமான பெண் யார் என்னும் கேள்விக்கு அவர்கள் பதிலளித்தார்கள்.
"என் மீது அக்கறை கொண்ட சிலர் இந்தக் கணிப்பின் முடிவை எனக்குத் தெரியப்படுத்தினார்கள். 40 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட கணிப்பில், இத்தனை திறமையும் அழகும் கொண்ட பெண்களில் ஒருத்தியாக நான் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. என் மீது அன்பும் அக்கறையும் கொண்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி" என்று ஐஸ்வர்யா ராய் கூறியிருக்கிறார்.
இந்தப் பட்டியலில் இந்தி நடிகை தீபிகா படுகோன் 29வது இடத்தைப் பிடித்திருக்கிறார். -பிடிஐ