Published : 05 Feb 2017 01:28 PM
Last Updated : 05 Feb 2017 01:28 PM

குறிப்புகள் பலவிதம்: வாடாத கொத்தமல்லி!

* வெங்காயத்தைக் காற்றுப் புகாதவாறு மூடிவைத்தால் சீக்கிரம் வீணாகிவிடும். அதை ஒரு பையில் போட்டு காற்று செல்ல வசதியாக துளைபோட்டு, கயிறு கட்டித் தொங்கவிட்டால் பல நாட்களுக்குக் கெடாது.

* கொத்தமல்லி தழை வாடிவிட்டால் அதை வெதுவெதுப்பான நீரில் போட்டு உடனே எடுத்து, தண்ணீரை வடியவைத்தால் பச்சைப் பசேலென்று மாறிவிடும்.

* பச்சை மிளகாய்களைக் காம்பு கிள்ளிவிட்டு கண்ணாடி பாட்டிலில் போட்டு, சிறிதளவு மஞ்சள் பொடியைத் தூவி குலுக்கிவைத்தால், சீக்கிரம் கெடாது.

* வாழைக்காயை குளிர்ந்த நீரில் போட்டுவைத்தால் நான்கு நாட்கள்வரை பழுக்காமல் இருக்கும். தினமும் தண்ணீரை மாற்ற வேண்டும்.

* இஞ்சியை ஈரத்துணியில் சுற்றி, தண்ணீர்க் குடத்தின் மீது வைத்தால் பத்து நாட்கள்வரை கெடாது.

* எலுமிச்சம்பழத்தை ஃபிரிட்ஜில் இருந்து எடுத்து உடனே பிழிய வேண்டும் என்றால் கொதிக்கும் நீரில் போட்டு எடுத்துப் பிழிந்தால் நிறைய சாறு கிடைக்கும்

- உஷா முத்துராமன், மதுரை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x