

ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் அடக்கிவைக்கப்பட்ட பெண்களின் உணர்வுகள் கடந்த நூற்றாண்டில் தளைகளைத் தகர்த்துக்கொண்டு தம்மை வெளிப்படுத்திக்கொள்ளத் தொடங்கின. பெண்களைப் பற்றி ஆண்களே எழுதிக்கொண்டிருந்த போக்கு குறைந்து பெண்கள் தங்கள் வாழ்வை, தங்கள் கதைகளை, தங்கள் உணர்வுகளைத் தாங்களே எழுத ஆரம்பித்தார்கள். பெண் எழுத்து என்றும் பெண் மொழி என்றும் பொதுவாகச் சொல்லப்படும் இந்த எழுத்து புத்தாயிரத்தில் புதிய எழுச்சியுடன் தன் கிளைகளை விரித்துவருகிறது. பல்வேறு வண்ணங்களில் வெளிப்பட்டுகிறது. கவிதை, சிறுகதை, நாவல், தன்வரலாறு, பெண் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு எனப் பல தளங்களில் இது நடக்கிறது.
இவற்றில் எதையும் விட்டுவிடமுடியாதபடிக்கு ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் முக்கியத்துவம் பெற்றவையாக இருக்கின்றன. இத்தகைய பதிவுகள் குறித்துப் பெண் எழுத்தாளர்கள், பெண்ணியச் செயற்பாட்டாளர்களிடம் பேசியதிலிருந்து கிடைத்த பரிந்துரைகளிலிருந்து கீழ்க்கண்ட பட்டியல் தரப்படுகிறது. பெண்களின் வாழ்வை, வரலாற்றில் அவர்களுடைய பயணத்தை, அவர்களுடைய படைப்பூக்கத்தைக் காட்டும் நூல்கள் இவை:
தேரி காதை
( பவுத்த பிக்குணிகளின் பாலி மொழிப் பாடல்கள்)
ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் - பேராசிரியர் மங்கை
விலை: ரூ.100.
சந்தியா பதிப்பகம்,
ஆளற்ற பாலம்
சுதந்தரப் போராட்டத்திலும் கம்யூனிஸ்ட் கட்சிகளிலும் பணியாற்றிய போராளி கோடேஸ்வரம்மாவின்
தன்வரலாறு. தெலுங்கிலிருந்து தமிழில்: கௌரி கிருபானந்தன்.
விலை: 245.வெளியீடு: காலச்சுவடு
ஆனந்தாயி
சிவகாமி ஐஏஎஸ்,
தலித் பெண்களின் துயரத்தை அச்சமூட்டும் வகையில் விவரிக்கும் நாவல். நிலையான நீடித்த ஒரு துயரம், ஆறுதலே இல்லாத ஒரு தொடர்வலியாக நாவல் நீண்டு செல்கிறது.
விலை.185
பெண் எனும் பகடைக்காய்
பா. ஜீவசுந்தரி
(‘தி இந்து’ தமிழ் நாளிதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு
வெளியீடு: ‘தி இந்து’, விலை. ரூ.100
ஒரு பெண்ணியப் பார்வையில் சாதியும் பால்நிலைப் பாகுபாடும்
உமா சக்ரவர்த்தி, தமிழில் வ.கீதா. பாரதி புத்தகாலயம்- விலை. ரூ.70.
ஒரு வாழ்க்கையின் துகள்கள்
மைதிலி சிவராமன் தனது பாட்டியின் பன்முக ஆளுமை பற்றி எழுதியுள்ள நூல். பாரதி புத்தகாலயம்.
கவலை
அழகிய நாயகி அம்மாள்: எழுத்தாளர் பொன்னீலனின் தாயார் அழகிய நாயகி அம்மாள் அவரது முதுமைக்காலத்தில் எழுதிய நாவல் வடிவத்திலான தன்வரலாறு. வெளியீடு- நாட்டார் வழக்காற்றியல் மையம்.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சுயசரிதை
வெளியீடு: அவ்வை இல்லம் - ராஜலட்சுமி அறக்கட்டளை, சென்னை.
என் கதை
கமலாதாஸ்
தமிழில்: நிர்மால்யா
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
விலை: ரூ.145
ஊதாநிறச் செம்பருத்தி,
சிமாமந்தா எங்கோசி அடிச்சி, தமிழில்: பிரேம்,
வெளியீடு: அணங்கு பதிப்பகம்
விலை: ரூ.250.
(நைஜீரியப் பெண் எழுத்தாளரான சிமாமந்தாவின் முதல் நாவல் இது. காமல் வெல்த் எழுத்தாளார் விருதைப் பெற்றிருக்கிறது)