அக்கம் பக்கம்: இதுதான் நான்!

அக்கம் பக்கம்: இதுதான் நான்!
Updated on
2 min read

உண்மை எப்படியிருந்தாலும் சரி, எப்போதுமே நம்மை நாம் மிக உயர்வாகவே நினைத்துக்கொள்கிறோம். ஒன்றிரண்டு படிகள்கூடத் தாழ்த்திக்கொள்வதில்லை. ஆனால் இங்கே இடம்பெற்றுள்ள கேலிச்சித்திரங்கள் சுய எள்ளலின் ஓவிய வடிவம். இவற்றை வரைந்தவர் ப்ரூடன்ஸ் என்ற புனைபெயரைக் கொண்டவர்.

இவற்றைப் பார்த்தவுடன் சட்டென்று ஒரு சிரிப்பு நம் முகத்தில் தோன்றி மறையும். இதற்கு முக்கியக் காரணம் ப்ரூடன்ஸைப் போலவே, நாமும் ஏதோ ஒரு நிலையில் இந்த விஷயங்களை எதிர்கொண்டிருப்போம். தான் அன்றாடம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள், கேள்விகள், கருத்துகளைக் கேலிச்சித்திர ஓவியங்களாக வடிப்பது இவரது வழக்கம்.

தன் ஓவியங்களை @planetprudence என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் இவர் பதிவேற்றுகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in