சேனல் சிப்ஸ்: ராஜா ராணிக்குத் தயார்

சேனல் சிப்ஸ்: ராஜா ராணிக்குத் தயார்
Updated on
1 min read

சன் தொலைக்காட்சியில் ‘தெய்வமகள்’, ‘நந்தினி’ தொடர்களில் அசத்திவரும் ஷப்னம், அடுத்து விஜய் தொலைக்காட்சிக்காக ‘ராஜா ராணி’ என்ற புதிய தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

“என்னை‘தெய்வமகள்’ தாரணின்னு கூப்பிட்டுக்கிட்டிருந்த எல்லோரும் இப்போ ‘நந்தினி’ ரம்யான்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க. சுந்தர்.சி, ராஜ்கபூர் சார் கூட்டணியில் சினிமா மாதிரி இந்த சீரியல் ஷுட் நடக்குது. சீரியல்ல நடிக்கிற எல்லாரோட ஆடை, ஆபரணங்களைப் பார்த்துக்கிட்டே இருக்கலாம். அந்த அளவுக்கு பிரமாதமா இருக்கு. இந்த மகிழ்ச்சியோடு இப்போ விஜய் டிவிக்காக ‘ராஜா ராணி’ ஷுட்டிங் போகப் போறேன். முதல்கட்ட ஷுட்டிங் பாண்டிச்சேரியில் நடக்கப் போகுது. எப்பவும் போல இந்த ஆண்டும் சின்னத்திரையில் ஒரு ரவுண்டு வரணும்!’’ என்கிறார் ஷப்னம்.

அழுதுகிட்டே இருக்கணும்!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘அபூர்வ ராகங்கள்’ தொடரில் வில்லியாக நடித்துவரும் யமுனா, விரைவில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள ‘யாரடி நீ மோகினி’ தொடரில் வித்தியாசமான அவதாரம் எடுக்கவிருக்கிறார்.

“சீரியல்களில் கவலையைச் சுமப்பது, வறுமையில் வாடுறது, முழுக்க அழுதுகிட்டே இருக்குற மாதிரியான கதாபாத்திரங்கள் அமையணும்னு நானும் தேடிக்கிட்டே இருக்கேன். ஆனா, காயத்ரி, மதுர, இப்போ நடித்துக்கொண்டிருக்கிற ‘அபூர்வ ராகங்கள்’ வரைக்கும் வில்லத்தனமான கதாபாத்திரம்தான் தேடி வருது. சமீபத்தில் ஒரு குறும்படத்தில் பாசமான ரோலில் நடிக்கும்போது, “முகத்துல கோபம் வந்துடுதே?”ன்னு சுத்தி இருக்குறவங்க சொன்னாங்க. அந்த அளவுக்கு வில்லத்தனமான நடிப்பு என்னை ஆக்கிரமிச்சு இருக்கு. அந்த வரிசையில அடுத்து ஜீ

தமிழ்ல ஒளிபரப்பாக உள்ள ‘யாரடி நீ மோகினி’தொடரில் பயங்கர திகில் அவதாரம் எடுக்கப் போறேன். அதுல அன்பும் பாசமும் இருக்கும். சீரியல் பார்த்துட்டு நீங்களே சொல்லுங்க!’’ என்கிறார் யமுனா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in