சேனல் சிப்ஸ்: நடிக்கவும் முடியும்

சேனல் சிப்ஸ்: நடிக்கவும் முடியும்
Updated on
1 min read

சன், தந்தி, புதிய தலைமுறை தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக வலம்வந்த திவ்யா, தற்போது ‘நியூஸ் 18’ தொலைக்காட்சியில் சினிமா நிகழ்ச்சித் தொகுப்பாளர், செய்தி வாசிப்பாளராகக் கவனத்தை ஈர்க்கிறார்.

“சின்னத்திரை தொகுப்பாளர் பயணத்தை ஆரம்பித்து ஐந்து ஆண்டுகள் ஓடியே போச்சு. தண்ணீரில் கிடக்கிற கல் மாதிரி வாழ்க்கை இருக்கக்கூடாதுன்னு விரும்புற பொண்ணு நான். இந்த ஆண்டாவது மீடியாவில் அடுத்த கட்டத்துக்குப் போகணும். அதுக்காக தொடர், சினிமா பக்கம் கவனத்தைச் செலுத்த ஆரம்பிச்சுட்டேன். சின்னத்திரையில் தொகுப்பாளராக முகம் காட்டுபவர்கள் அந்த ஒரு கதாபாத்திரத்துக்குத்தான் சரி வருவோம்னு நினைச்சு, அதேமாதிரி கதாபாத்திரங்களைக் கொடுக்கிறாங்க. தொகுப்பாளர்களாலும் பல கதாபாத்திரங்களில் சிறப்பாக நடிக்கமுடியும். அதை நோக்கி பயணித்துவருகிறேன்’’ என்கிறார் திவ்யா.

விரைவில் வில்லன்

ராஜ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக வலம்வரும் ராஜீவ், சிங்கப்பூரில் ஒளிபரப்பாகும் ‘வண்ணத்திரை’ தொலைக்காட்சியிலும் தொகுப்பாளராகப் பணிபுரிந்துவருகிறார். “மாடலிங், நடனம், நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்று எப்போதும் போல பரபரப்பாகத் தொடங்கியுள்ளது இந்த ஆண்டு. சமீபக்காலமாக சிங்கப்பூரில் உள்ள ‘வண்ணத்திரை’ தொலைக்காட்சிக்கு ‘டாப் டென் மூவிஸ்’சினிமா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் பணியை ஆரம்பித்திருக்கிறேன்.

நிகழ்ச்சியை சென்னையில் இருந்தே ஒளிப்பதிவு செய்து அனுப்புறோம். ஒவ்வொருமுறையும் நிகழ்ச்சிக்கு சிங்கப்பூரில் கிடைக்கும் வரவேற்பு மேலும் உற்சாகமூட்டுது. நடனம், ஃபேஷன் ஷோ நிகழ்ச்சிகள் கொடுக்கும் ஆர்வம் நடிப்புக்குப் பெரிய பலமாக அமைந்துள்ளது. சீக்கிரமே வில்லன் அவதாரம் எடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை’’ என்கிறார் ராஜீவ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in