

எனக்குச் சின்ன வயது முதலே சிலேட் குச்சி சாப்பிடும் பழக்கமிருக்கிறது. கல்லூரியில் படிக்கிறேன். இன்னும் அந்தப் பழக்கம் போகவில்லை. ஒரு வாரத்தில் நான்கு பெட்டி சிலேட் குச்சி சாப்பிடுறேன். இந்தப் பழக்கத்தை எப்படிக் கை விடுவது? இதனால் என்ன பாதிப்பு வரும்?
- காவ்யா, ஈரோடு.
டாக்டர்.எஸ்.சிவராம் கண்ணன், சென்னை.
இந்தப் பிரச்சினை உங்களுக்கு மட்டுமில்லை, நிறைய மாணவர்களுக்கு இருக்கிறது. சிலேட் குச்சி சாப்பிடுவதால் அஜீரணம், சிறுநீரகக் கோளாறு ஏற்படலாம். கல் உருவாகலாம். இன்னும் நிறைய பிரச்சினைகளை இந்தப் பழக்கம் ஏற்படுத்தும். ரத்தசோகை இருப்பதால் சிலருக்கு சிலேட் குச்சி சாப்பிடும் எண்ணம் வரும். சிலருக்கு வயிற்றில் கிருமி இருப்பதாலும் வரலாம். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவினை மருத்துவர்கள் பரிசோதித்து, அதனைச் சரிசெய்வார்கள். அதற்குப் பிறகு வயிற்றில் உள்ள கிருமியை அகற்ற வேண்டும். இப்படிச் செய்தால், சிலேட் குச்சி சாப்பிடும் எண்ணம் குறையும்.