சேனல் சிப்ஸ்: மீண்டும் வந்தாச்சு

சேனல் சிப்ஸ்: மீண்டும் வந்தாச்சு
Updated on
1 min read

‘தெய்வ மகள்’ மலையாள ரீமேக்கில் வில்லியாக நடித்துவந்த ரெந்தியா தற்போது தமிழில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘கல்யாணப் பரிசு’ தொடரிலும் வில்லி வேடம் ஏற்றிருக்கிறார்.

“தமிழ்ல ஒரு சின்ன இடைவேளைக்குப் பிறகு மீண்டும் வந்திருக்கேன். நெகடிவ்ல எத்தனை விதமான ரோல் இருக்கிறதோ அத்தனையும் நடிச்சாச்சு. இப்பவும் அதே மாதிரி நெகடிவ் ரோல்தான் அமைஞ்சிருக்கு. எனக்கு பாசிடிவ் கதாபாத்திரங்களும் பண்ணணும். தமிழ்ல வர்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகள் எல்லாம் அசத்தலா இருக்கு. அடுத்து அதுல கவனம் செலுத்தப்போறேன். மலையாளத்தில் ஒளிபரப்பான ‘தெய்வ மகள்’ சீரியலுக்காக கேரளாவுக்குப் போய் வந்தேன். அதனால் நான் அங்கேதான் இருக்கேன்னு நிறையப் பேர் நினைக்கிறாங்க. சென்னையிலதான் என் வீடு. நானும் இங்கேதான் இருக்கேன்.!’’ என்கிறார் ரெந்தியா.

மனசுக்குப் பிடிச்ச பொண்ணு

விஜய் தொலைக்காட்சியில் ‘தெய்வம் தந்த வீடு’, சன் டிவியில் ‘அபூர்வ ராகங்கள்’ என்று அசத்திவருகிறார் வள்ளி.

“ஒண்ணுல சமத்துப் பொண்ணு. இன்னொரு சீரியல்ல துணிச்சலான சமத்துப் பொண்ணுன்னு பரபரப்பா ஓடிக்கிட்டிருக்கேன். ரெண்டு சீரியல்ல நடிச்சாலும் இன்னும் ரெண்டு சீரியலுக்கு கால்ஷீட் கொடுக்கலாம். அவ்ளோ நேரம் இருக்கு. எனக்கு எப்பவுமே தேவையில்லாம நேரத்தைச் செலவழிக்கக் கூடாதுன்னு தோணும். அதனால்தான் சீரியல் நடிப்பு, டப்பிங் நேரம் போக சினிமாவில் கவனம் செலுத்திட்டுவர்றேன். ‘மதியால் வெல்’னு ஒரு படம் முடிஞ்சாச்சு. அது மார்ச்ல ரிலீஸ் ஆகுது. சின்னத்திரைக்கு வந்து எட்டு வருஷம் ஓடிப் போச்சு. ‘இந்த மாதிரி நம்ம வீட்ல ஒரு பொண்ணு இருந்தா நல்லா இருக்கும்!’னு பாராட்டுற பெண்ணாதான் சீரியல்ல முகம் காட்டியிருக்கேன். அதுவே என் அதிர்ஷடம்” என்கிறார் வள்ளி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in