

# முட்டைகோஸ், முள்ளங்கி, வெள்ளைப்பூசணி, சுரை, புதினா, கொத்தமல்லி, வாழைத்தண்டு ஆகியவற்றை ஜூஸாகப் பருகினால் உடல் பருமன் குறையும், நீரிழிவு நோயும் மட்டுப்படும்.
# எலுமிச்சை சாறு அல்லது தக்காளியின் சதைப் பகுதியைப் பாலுடன் சேர்த்து முகத்தில் தடவிவந்தால் கரும்புள்ளிகள் குறையும்.
# புதினா அல்லது கறிவேப்பிலைச் சாற்றுடன் பச்சைக் கற்பூரத் தூள் கலந்து நீரோடு தெளித்தால் உணவு மேஜையை ஈ, கொசு நீண்டநேரம் அண்டாது.
# எலுமிச்சை சாறைப் பிழிந்த பிறகு தோலைத் தூக்கி எறியாமல் குக்கரில் கொஞ்சம் தண்ணீர், கல் உப்பு,எலுமிச்சை தோலைப் போட்டு கொதிக்கவிட்டால் குக்கரில் உள்ள கறை காணாமல் போகும்.
# வெள்ளை துணி பழுப்பு நிறத்துக்கு மாறிவிட்டதா? கவலை வேண்டாம். ஒரு கப் சுடுநீரில் கல் உப்பு, துணி சோடா கலந்து அரை வாளி நீரில் ஊற்றுங்கள் அதனுடன் அரை எலுமிச்சை பழச்சாற்றைக் நன்கு கலந்து அதில் பழுப்பேறிய வெள்ளை துணியைப் போட்டு ஊறவைத்து எடுங்கள். துணி வெள்ளை நிறமாக மாறி ஜொலி ஜொலிக்கும்.
# வெங்காயச் சாறு அல்லது பூண்டு சாற்றில் மிளகுத்தூள் கலந்து பூச பருவும் வடுவும் மறைந்துவிடும்.
# கீரைத் தண்டுகளைத் தூக்கி எறியாமல் அவற்றை சூப்பாக வைத்துக் குடிக்கலாம்.
# ஆரஞ்சுச் தோல், வசம்புத் தூள் ஆகியவற்றை அலமாரிகளில் வைத்தால் பூச்சிகள் ஓடும்.
# பச்சை மிளகாயின் காம்பைக் கிள்ளி சிறிது மஞ்சள் பொடியுடன் கண்ணாடி பாட்டிலியில் போட்டு வைத்தால் ஒரு வாரம்வரை வாடாமல் இருக்கும்.
# வெள்ளிப் பாத்திரங்களை விபூதி போட்டு தேய்த்து வெள்ளைத் துணியால் துடைத்தால் பளிச்சிடும்.
# மல்லிகைப்பூ, செம்பருத்திப்பூவில் சாறு எடுத்து பனை வெல்லத்துடன் பருகிவந்தால் கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.
- நவீணாதாமு, பொன்னேரி.