குறிப்புகள் பலவிதம்: பொலிவு தரும் கேரட்

குறிப்புகள் பலவிதம்: பொலிவு தரும் கேரட்
Updated on
1 min read

# வறண்ட சருமம் உள்ளவர்கள் ஆப்பிளைத் தோல் சீவி, நன்றாக மசித்துக்கொள்ளுங்கள். அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பொடி இரண்டையும் கலந்து முகத்தில் பூசி சுமார் அரை மணி நேரம் ஊறவிட்டுக் கழுவிவந்தால் சருமம் மிருதுவாகும்.

# முகத்தில் எண்ணெய்ப் பசை அதிகமாக இருந்தால் தக்காளியைக் கூழாக்கிப் பூசலாம். ஆப்பிளைச் சிறு  துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவிவந்தாலும் சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசை குறையும்.

# மோரை முகத்தில் தடவி 15  நிமிடம் கழித்துக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவு பெறும்.

# நன்றாகப் பழுத்த வாழைப்பழத்தைப் பிசைந்து  முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்துக் கழுவினால் சருமம்  மிருதுவாகும்.

# எலுமிச்சைச் சாற்றைப் பஞ்சில் தொட்டு முகத்திலும் கழுத்திலும் தடவிவந்தால் எண்ணெய்ப் பசை நீங்கும்.

# உலர்ந்த சருமம் உள்ளவர்கள் கேரட்டை நன்றாக அரைத்து அதில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து 20  நிமிடம் முகம், கழுத்து, கைகளில் தடவிக் கழுவினால் பொலிவாகும்.

# போதுமான அளவு தண்ணீர் குடிப்பதுடன் பழங்களை அதிகமாகச் சாப்பிட்டுவந்தால் உடலின் வறட்சி நீங்கும்.

- கவிதா பாலாஜிகணேஷ், சிதம்பரம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in