

> ஜீரண சக்தி குறைவாக இருப்பவர்களுக்குத் தேங்காய்ப் பூ சிறந்த மருந்து. தேங்காய்ப் பூவில் தாது உப்புகளும் வைட்டமின்களும் இருப்பதால் மலச்சிக்கல் சீராகும்.
> தேங்காய்ப் பூ ரத்தத்தில் அதிகப்படியாகச் சுரக்கும் சர்க்கரையைக் கட்டுப்படுத்த உதவும்.
> தேங்காய்ப் பூவில் அதிக அளவில் ஊட்டச்சத்து இருப்பதால் நோய் எதிர்ப்புச் சக்தியை இருமடங்கு அதிகரிக்க உதவுகிறது. பருவ காலத் தொற்று நோய்களிலிருந்து முழுமையான பாதுகாப்பைத் தேங்காய்ப் பூ கொடுக்கிறது.
> மன அழுத்தம், வேலைப்பளு போன்றவை அதிகம் இருப்பவர்கள் தேங்காய்ப் பூவைச் சாப்பிட்டால் சக்தி கிடைப்பதோடு நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கலாம்.
> முகச் சுருக்கம், வயதான தோற்றம், சருமத் தொய்வு போன்றவற்றைத் தேங்காய்ப் பூ நெருங்கவிடாது.
> இளநரை, முடி கொட்டுதல் பிரச்சினைகளுக்கு மாவிலைச் சாற்றுடன் பொன்னாங்கண்ணிச்சாற்றையும் தேங்காய் எண்ணெய்யையும் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்துவருவது நல்லது.
> பித்த வெடிப்பின் மீது மாவிலைக் காம்பை ஒடித்து அதில் இருந்து வரும் பாலைத் தடவிவரக் குணமாகும்.
> தொண்டைக் கட்டுக்கும் குரல் கம்மலுக்கும் மாவிலைக் கொழுந்தைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, அதனுடன் சிறிதளவு தேன் சேர்த்து மென்று சாப்பிடக் குணமாகும்.
> வேப்பிலைச் சாறு, எலுமிச்சைச் சாறு, தேன் மூன்றையும் கலந்து இரவில் குடித்துவர நல்ல தூக்கம் வரும்.
> வெற்றிலை, இஞ்சி, தேன் ஆகிய மூன்றையும் வெறும் வாயில் மென்று சாப்பிட்டால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்; வயிற்றுப் பிரச்சினைகள் குணமாகும்.
> குழந்தைகளுக்கு ஏற்பட்ட சளி விரைவில் குணமாகத் துளசி, மிளகு, வேப்பிலை மூன்றையும் கஷாயமாக்கிக் குடித்தால் சளியால் ஏற்பட்ட உடல் வலி விரைவில் குணமாகும்.
> துளசி இலைகளை வெந்நீரில் போட்டு ஆவி பிடித்தால் சளி, தலைவலி போன்றவை மட்டுப்படும்.
> துளசியுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து அரைத்து, தோல் புண், பூச்சிக்கடிக் காயங்கள் மீது தடவிவர விரைவில் குணமாகும்.
- கோவிந்தராஜன், சென்னை.