போகிற போக்கில்: கண்களில் தொடங்கும் காவியம்

போகிற போக்கில்: கண்களில் தொடங்கும் காவியம்
Updated on
1 min read

உயிரோட்டமுள்ள ஓவியங்கள் பேசும் என்பார்கள். பிரியதர்ஷினி வரைந்த ஓவியங்கள் இந்த வார்த்தைகளை மெய்ப்பிக்கின்றன.  மதுரையைச் சேர்ந்த இவர், ஓவியத்தின் மீதான ஈர்ப்பால் 16 வயதிலிருந்தே முழுநேர ஓவியராகிவிட்டார்.pogira-8jpgபிரியதர்ஷினி

இவரது கைவண்ணத்தில் மிளிரும் ஓவியங்களில் தெய்வ ரூபங்களே அதிகம். ஓவியப் பிரிவில் எல்லா வகையான ஓவிய முறைகளும் பிரியதர்ஷினிக்கு அத்துப்படி.

அப்பா சபாபதி ஓவியர் என்பதால், பிரியதர்ஷினிக்கும் ஓவியத்தின் மீது இயல்பாகவே ஆர்வம் வந்துவிட்டது. பெரும்பாலான நேரத்தைத் தன் தந்தையின் ஓவியக் கூடத்தில் கழித்துவருகிறார். மனிதர்களுக்கு மட்டுமல்ல, மனிதர்களால் உருவாக்கப்படும் ஓவியத்துக்கும் உயிர்கொடுப்பவை கண்கள்தாம். கண்களின் அமைப்பே ஒரு ஓவியத்தின் தன்மையைத் தீர்மானிக்கும் என்று சொல்லும் பிரியதர்ஷினி, கண்களிலிருந்தே ஓவியத்தை வரையத் தொடங்குகிறார்.

எல்லாமே டிஜிட்டல்மயமாகிவரும் இன்றைய தலைமுறையைப் பொறுத்தவரை ஓவியம் என்பது மெல்ல அழிந்துவரும் கலையாகிவிட்ட நிலையில், அதை மீட்டெடுக்கும் முயற்சியிலும் களம் இறங்கியிருக்கிறார் பிரியதர்ஷினி. இதன் ஒரு பகுதியாகச் சிறுவர் சிறுமிகளுக்கு பென்சில் ஆர்ட் வரையக்  கற்றுக்கொடுத்துவருகிறார்.

பெரிய ஓவியப் பள்ளியைத் தொடங்கி, நிறைய இளம் ஓவியர்களை உருவாக்க வேண்டும் என்பதுதான் தன் ஆசை என்கிறார் பிரியதர்ஷினி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in